Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: மும்பை இந்தியன்ஸ் கொடுத்த தொகைக்கு நீ ஒர்த் தான்ப்பா! கேமரூன் க்ரீனுக்கு இர்ஃபான் பதான் பாராட்டு

மும்பை இந்தியன்ஸ் கேமரூன் க்ரீனுக்கு கொடுத்த பெரிய தொகைக்கு அவர் நியாயம் சேர்த்துவிட்டதாக  இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
 

irfan pathan opines that cameron green worth for the huge price mumbai indians given amid ipl 2023
Author
First Published May 22, 2023, 9:10 PM IST

ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன.

இந்த சீசனை மிக சுமாராக தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, லீக் சுற்றின் பிற்பாதியில் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து பிளே ஆஃபிற்கு முன்னேறியது. பும்ரா இல்லாததால் பவுலிங்கில் திணறினாலும், பேட்டிங்கில் அடி பட்டையை கிளப்பிவிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி. 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாக விரட்டி 3 முறை வெற்றி பெற்றது.

IPL 2023: ஆர்சிபியிலிருந்து விலகும் விராட் கோலி..? எந்த அணியில் இணைகிறார் தெரியுமா..?

கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலையில், கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, 201 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம், கேமரூன் க்ரீனின் அதிரடி சதம். அதிரடியாக ஆடி 47 பந்தில் 100 ரன்களை குவித்தார் க்ரீன். அவரது சதத்தால் முக்கியமான போட்டியில் 201 ரன்கள் என்ற கடின இலக்கை  விரட்டி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.

கேமரூன் க்ரீன், சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக் ஆகிய வீரர்கள் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டனர். இவர்களில் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கேவிற்கு சொல்லும்படியான பங்களிப்பை செய்யவில்லை.  சாம் கரன் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பஞ்சாப் அணிக்கு பங்களிப்பு செய்திருந்தாலும் ஒரு அணியாக அந்த அணி சிறப்பாக செயல்படாததால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியவில்லை. 

ஆனால் கேமரூன் க்ரீன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவில் சில இன்னிங்ஸ்களை ஆடினார். பவுலிங்கும் நன்றாக வீசினார். அதிலும் வாழ்வா சாவா என்ற கடைசி போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.

IPL 2023: ஐபிஎல்லில் அசத்திய இந்த 3 வீரர்களையும் ODI உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கணும் - ரவி சாஸ்திரி

இந்நிலையில், கேமரூன் க்ரீன் குறித்து பேசிய இர்ஃபான் பதான், மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் க்ரீன் மீது பெரிய தொகையை முதலீடு செய்தது. பவர் ஹிட்டரான க்ரீன் ஏமாற்றமளிக்கவில்லை. மும்பை இந்தியன்ஸின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். அடுத்த போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடப்பதால் கேமரூன் க்ரீன் 3ம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும். சூர்யகுமார் யாதவ் 4ம் வரிசையில் பேட்டிங் ஆடலாம் என்று இர்ஃபான் பதான் க்ரீனை பாராட்டி பேசியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios