நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரில் அயர்லாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்து வென்றது நியூசிலாந்து அணி.
அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடக்கிறது. முதல் டி20 போட்டி இன்று பெல்ஃபாஸ்ட்டில் நடக்கிறது. கடைசி ஒருநாள் போட்டியில் 361 ரன்கள் என்ற கடின இலக்கை வெறித்தனமாக விரட்டி வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அயர்லாந்து அணி, டி20 தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இதையும் படிங்க - ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸின் திடீர் ஓய்வுக்கு இதுதான் காரணம்
முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அயர்லாந்து அணி:
பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), காரெத் டிலானி, ஹாரி டெக்டார், கர்டிஸ் காம்ஃபெர், ஜார்ஜ் டாக்ரெல், லார்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), மார்க் அடைர், பாரி மெக்கார்த்தி, க்ரைக் யங், ஜோஷுவா லிட்டில்.
இதையும் படிங்க - இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து..? ஷேன் வார்ன் மாதிரியான அதிசய பந்தை வீசி அசத்திய யாசிர் ஷா.. வைரல் வீடியோ
நியூசிலாந்து அணி:
மார்டின் கப்டில், ஃபின் ஆலன், டேன் க்ளீவர் (விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், ஜேக்கப் டஃபி.
