Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் அணிகளுக்கு அதிரடி உத்தரவு.. தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட கெடு விதிப்பு

ஐபிஎல் 16வது சீசன்(2023) அடுத்த மாதம் ஏப்ரலில் தொடங்கவுள்ள நிலையில், அடுத்த சீசனுக்கு அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ipl teams to submit list of retained players on or before november 15
Author
First Published Oct 16, 2022, 11:09 PM IST

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. 15வது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்ற 2 அணிகள் புதிதாக களமிறங்கியதால் கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடத்தப்பட்டது.

அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது. அடுத்த ஐபிஎல் சீசன், 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தெரிகிறது. 

இதையும் படிங்க - ஃபாஸ்ட் பவுலர்கள் படுமோசம்.. பேட்டிங் அதைவிட மோசம்..! நமீபியாவிடம் தோற்ற இலங்கையை வெளுத்து வாங்கிய மலிங்கா

அடுத்த சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 3வது வாரத்தில் பெங்களூருவில் நடக்கவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலை தயார் செய்யவேண்டும். 

இந்நிலையில், ஐபிஎல் அணிகள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடர் நவம்பர் 13 முடியும் நிலையில், இந்த டி20 உலக கோப்பையில் வீரர்கள் ஆடுவதை பொறுத்து  அணிகள் தங்களுக்கு தேவையான மற்றும் தேவையில்லாத வீரர்களை முடிவு செய்யும்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: விசா பிரச்னையால் ஆஸி.,க்கு பறக்கமுடியாத உம்ரான் மாலிக்..! இன்னொரு வீரரும் பாவம்

அடுத்த சீசனுக்கான ஏலத்திற்கு ஒவ்வொரு அணிக்கும் முன்பை விட கூடுதல் தொகை அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios