2023 ஆம் ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் சீசன் போட்டி அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. 

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் தொடங்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு அறிமுகமான ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. மும்பை மற்றும் சென்னை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த சேத்தன் சர்மா!

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான 16 ஆவது ஐபிஎல் சீசனுக்காக போட்டி அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் எந்த அணியும் தங்களது சொந்த மண்ணில் விளையாடவில்லை.

கவாஜா 50, ஸ்மித் டக் - ஆஸ்திரேலியா நிதானமான தொடக்கம்!

ஆனால், இந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் தங்களது சொந்த மண்ணில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணியின் கோட்டையாக திகழும் சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

100ஆவது டெஸ்டில் புஜாரா: 2ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸி, பேட்டிங்!

Scroll to load tweet…