கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் ஐபிஎல் 14வது சீசன் எந்த பிரச்னையும் இல்லாமல் நடத்தப்பட்டுவந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியானது.

அதன்விளைவாக ஆர்சிபி - கேகேஆர் இடையேயான நேற்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவருக்கு கொரோனா உறுதியானது. சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் லக்‌ஷ்மிபதி பாலாஜி மற்றும் சிஎஸ்கே பஸ் க்ளீனர் ஆகிய மூவருக்கும் கொரோனா உறுதியானது.

இந்நிலையில், இன்று டெல்லி கேபிடள்ஸ் வீரர் அமித் மிஷ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியானது. ஐபிஎல்லில் ஆடும் வீரர்களுக்கு கொரோனா அடுத்தடுத்து உறுதியாகி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதையடுத்து, இப்போதைக்கு ஐபிஎல்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.