Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? இன்சமாம் என்ன சொல்றாருனு பாருங்க

உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார். 

inzamam ul haq picks his favourites for world cup 2019
Author
Pakistan, First Published Apr 11, 2019, 1:57 PM IST

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. அந்த அணியில் கப்டில், வில்லியம்சன், டெய்லர், லதாம், கிராண்ட் ஹோம் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே அந்த அணியும் உலக கோப்பையில் கடும் சவாலான அணியாக திகழும். 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியையும் அதன்பின்னர் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தி புது உத்வேகத்துடன் காணப்படுகிறது. ஸ்மித் - வார்னர் இல்லாமலேயே அந்த அணி இந்திய அணியை வீழ்த்திவிட்டது. உஸ்மான் கவாஜா, ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகின்றனர். ஸ்மித்தும் வார்னரும் திரும்பிவிட்டதால் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி மிரட்டும். அதுமட்டுமல்லாமல் உலக கோப்பைக்கு அந்த அணியின் துணை பயிற்சியாளராக 2 உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை வெல்லும் உத்தியை அறிந்த அணி. எனவே உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியும் கடும் சவாலளிக்கும். 

inzamam ul haq picks his favourites for world cup 2019

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணியும் அபாரமாக ஆடிவருகிறது. கெய்ல், ஷாய் ஹோப், ஹெட்மயர், பிராத்வெயிட், ஹோல்டர் என அந்த அணியும் வலுவாக திகழ்கிறது. இவை தவிர தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் சிறந்த அணிகள்தான். யாரும் கண்டுகொள்ளாத ஆஃப்கானிஸ்தான் அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருவதால் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கண்டிப்பாக மிகப்பெரிய அணிகளுக்கு எல்லாம் ஆஃப்கானிஸ்தான் அணி கடும் சவாலாக திகழும். ஆசிய கோப்பையில் கூட இந்திய அணிக்கு கடும் சவாலாக திகழ்ந்தது. கடைசியில் இந்திய அணியால் போட்டியை டிரா செய்ய முடிந்ததே தவிர வெல்ல முடியவில்லை. அதனால் ஆஃப்கானிஸ்தான் அணியையும் எளிதாக எடைபோட்டு விட முடியாது. 

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்களும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியை கணித்து தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், உலக கோப்பையை வெல்லும் அணி குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் பாகிஸ்தானும் ஒன்று என்று தெரிவித்தார். 

inzamam ul haq picks his favourites for world cup 2019

அண்மையில் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரில் மரண அடி வாங்கியது பாகிஸ்தான். அதுகுறித்து பேசிய இன்சமாம், ஆஸ்திரேலிய தொடரில் பாகிஸ்தான் அணியின் முக்கியமான 7 வீரர்களுக்கு ஓய்வளித்தோம். அப்படியிருந்தும் கூட ஆஸ்திரேலியாவுக்கு டஃப் கொடுத்தது பாகிஸ்தான் என்றார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios