Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும்..! இன்சமாம் உல் ஹக் அதிரடி

டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்குத்தான் அதிக வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
 

inzamam ul haq opines india will have great chance to win t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 21, 2021, 5:43 PM IST

டி20 உலக கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. தற்போது தகுதி போட்டிகள் நடந்துவரும் நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்குகின்றன. 

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது இந்த டி20 உலக கோப்பை தொடர். இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. 

விராட் கோலி தலைமையில் முதல் முறையாக ஐசிசி டிராபியை தூக்கும் முனைப்பில் உள்ள இந்திய அணி, அதிரடி பேட்ஸ்மேன்கள், மாயாஜால ஸ்பின்னர் உட்பட சிறந்த ஸ்பின்னர்கள், உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலர்கள், நல்ல ஆல்ரவுண்டர்கள் என வலுவான மற்றும் பேலன்ஸான அணியை பெற்றுள்ளது.

பயிற்சி போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளையும் அசால்ட்டாக வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணி அதே நம்பிக்கையுடன் உலக கோப்பை தொடரில் ஆடவுள்ளது. இந்த உலக கோப்பை தொடரின் வலுவான அணியாக திகழும் இந்திய அணிக்குத்தான் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய இன்சமாம் உல் ஹக், எந்த தொடரிலுமே எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கணிப்பது கடினம். ஆனால் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை கூறமுடியும். அந்தவகையில், இந்த டி20 உலக கோப்பையை பொறுத்தமட்டில், இந்திய அணிக்குத்தான் கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புள்ளது. குறிப்பாக அமீரக கண்டிஷனில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிக அதிகம். மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இந்திய அணியில் உள்ளனர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்..! ஆஸி.,க்கு சான்ஸே இல்ல.. பிராட் ஹாக் அதிரடி

பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அசால்ட்டாக வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி. துணைக்கண்ட ஆடுகளங்களில் இந்திய அணி மிகவும்  அபாயகரமான அணி. ஆஸி.,க்கு எதிராக 155 ரன்கள் என்ற சவாலான இலக்கை விராட் கோலியே இல்லாமல் எளிதாக இந்திய அணி எட்டியிருக்கிறது என்றார் இன்சமாம். எனவே இந்திய அணி தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக உறுதிபட தெரிவித்துள்ளார் இன்சமாம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios