Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்..! ஆஸி.,க்கு சான்ஸே இல்ல.. பிராட் ஹாக் அதிரடி

டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு எந்த 4 அணிகள் முன்னேறும் என்று பிராட் ஹாக் ஆருடம் தெரிவித்துள்ளார். 
 

brad hogg picks semi finalists of t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 21, 2021, 4:20 PM IST

டி20 உலக கோப்பை கடந்த 17ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. தற்போது தகுதி போட்டிகள் நடந்துவரும் நிலையில், வரும் 23ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 

இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. உலக கோப்பை நடக்கும் ஐக்கிய அரபு அமீரக கண்டிஷன் பாகிஸ்தானுக்கு நன்கு பழக்கப்பட்டது என்பதால் அந்த அணியும் சிறப்பாக ஆடும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

ஆனாலும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 அணிகளுக்குமே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமுள்ளது. இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வென்றதில்லை என்ற விமர்சனத்தை உடைத்தெறிய இந்த கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளார் விராட் கோலி. ரோஹித், ராகுல், கோலி, ரிஷப், சூர்யகுமார் யாதவ் என இந்திய அணி அதிரடியான பேட்டிங் ஆர்டரையும், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, தீபக் சாஹர் என மிரட்டலான பவுலிங் யூனிட்டையும் பெற்று இந்திய அணி வலுவாக திகழ்கிறது.

ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிவருகிறது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. 2019ல் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, டி20 உலக கோப்பையையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.

பொல்லார்டு, கெய்ல், பிராவோ, ஆண்ட்ரே ரசல் என டி20 கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட மிரட்டலான அதிரடி வீரர்களை பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே டாப் கிளாஸ் அணி. பூரன், ஹெட்மயர் ஆகிய இளம் அதிரடி வீரர்களையும் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படுகிறது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருகிறது. எனவே டி20 உலக கோப்பையில் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

இந்நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என தங்களது ஆருடங்களை தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், எந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக் ஆருடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - பாகிஸ்தானுக்கு எதிராக இந்த 11 பேரை இறக்குங்க..! இர்ஃபான் பதானின் இந்திய அணி தேர்வு

இதுகுறித்து பேசிய பிராட் ஹாக், க்ரூப் 1ல் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ், க்ரூப் 2ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

தனது சொந்த நாட்டு அணியான ஆஸ்திரேலிய அணியை பிராட் ஹாக் தேர்வு செய்யவில்லை.
 

Follow Us:
Download App:
  • android
  • ios