Asianet News TamilAsianet News Tamil

நீங்க தொலைஞ்சிங்கடா.. ஆசிய கோப்பைக்கு முன் பாகிஸ்தானை எச்சரிக்கும் இன்சமாம் உல் ஹக்

ஆசிய கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு என்று முன்னாள் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் எச்சரித்துள்ளார்.
 

inzamam ul haq explains how shaheen afridi absence affects pakistan team in asia cup 2022
Author
Chennai, First Published Aug 22, 2022, 10:14 PM IST

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி. 22 வயதே ஆன ஷாஹீன் அஃப்ரிடி, பாகிஸ்தான் அணியின் முன்னணி மற்றும் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக வளர்ந்துள்ளார். 

பாகிஸ்தான் அணிக்காக 25 டெஸ்ட், 32 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் ஆடி முறையே 99, 62 மற்றும் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து கோலியை தூக்கி எறிய துணிந்த தேர்வாளர்கள்..! விரைவில் அணி அறிவிப்பு

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் முக்கியமான பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோரை விரைவில் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தவர் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி. அவர் தான் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கோப்பையில் 3 முறை  மோதும். இந்நிலையில், ஷாஹீன் அஃப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு கண்டிப்பாகவே பெரும் பின்னடைவாகவே அமையும். பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் ஷாஹீன் அஃப்ரிடி ஆடாததால் கவலையில் இருப்பதுடன், பாகிஸ்தான் அணிக்கு பெரும் பாதகமாக அமையும் என்று தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க - ஒரே சதத்தில் ரோஹித் சர்மாவின் சாதனையையே தகர்த்த ஷுப்மன் கில்..! யுவராஜ் சிங், கோலிக்கு அடுத்த இடம்

அந்தவகையில், இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், ஆசிய கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே அழுத்தம் கொடுத்தார். வீரர்களுக்கு காயம் ஏற்படுவதுதான். ஆனால் ஷாஹீன் அஃப்ரிடி  ஆடாதது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு என்று இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios