MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து கோலியை தூக்கி எறிய துணிந்த தேர்வாளர்கள்..! விரைவில் அணி அறிவிப்பு

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து கோலியை தூக்கி எறிய துணிந்த தேர்வாளர்கள்..! விரைவில் அணி அறிவிப்பு

ஆசிய கோப்பையில் விராட் கோலி ஆடுவதை பொருத்துத்தான் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவரது இடம் தீர்மானிக்கப்பட உள்ளது. 

2 Min read
Author : karthikeyan V
Published : Aug 22 2022, 08:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. அடுத்ததாக டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த 2 கோப்பைகளையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

கேப்டன் ரோஹித் சர்மா - பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கலந்தாலோசித்து, திட்டமிட்டு இந்திய அணியின் பென்ச் வலிமையை பலப்படுத்தியுள்ளனர். ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு கிரிக்கெட் தொடர்களில் ஆடுமளவிற்கு பென்ச் வலிமையை அதிகப்படுத்தியுள்ளனர்.
 

38

இந்திய அணியின் ஆடும் லெவனில் இருக்கும் முன்னணி வீரர்கள் ஒவ்வொருவர் இடத்திற்கும் 2 மாற்று வீரர்கள் தயாராக உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் எப்போது வேண்டுமானாலும் களமிறங்க தயாராக 30 வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். அனைவருமே திறமையான வீரர்கள் என்பதால் அவர்களுக்கு இடையே டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற கடும் போட்டி நிலவுகிறது.

இதையும் படிங்க - ஜிம்பாப்வே வீரருக்கு மன்கட் எச்சரிக்கை விடுத்த தீபக் சாஹர்..! வைரல் வீடியோ
 

48

இந்நிலையில், விராட் கோலி ஃபார்மில் இல்லாதது இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இளம் வீரர்கள் அபாரமாக ஆடிவரும் நிலையில், விராட் கோலி சரியாக ஆடாவிட்டாலும், அவரது பெயருக்காக அவரை ஆடும் லெவனில்  வைத்திருப்பது அணிக்கு பாதகமாக அமையும்.

58

அதனால் விராட் கோலி ஆசிய கோப்பையிலும் சரியாக ஆடாதபட்சத்தில் அவரை டி20  உலக கோப்பையில் ஆடவைப்பதவிட, அவரது இடத்தில் ஃபார்மில் உள்ள ஒரு இளம் வீரரை இறக்கலாம் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன. எனவே விராட் கோலிக்கு ஆசிய கோப்பை தொடர் வாழ்வா சாவா தொடர் ஆகும்.
 

68

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு தேர்வாளர்களுக்கு கடும் சவாலானதாக இருக்கும் என்பது தெரிந்ததுதான். 

இதையும் படிங்க -  ஒரே சதத்தில் ரோஹித் சர்மாவின் சாதனையையே தகர்த்த ஷுப்மன் கில்..! யுவராஜ் சிங், கோலிக்கு அடுத்த இடம்

78

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வு குறித்து அண்மையில் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டரை மாதம் இருக்கிறது. அதற்கு முன் ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்கள் உள்ளன. 80-90 சதவிகித இந்திய அணி தயாராக உள்ளது. கண்டிஷனை பொறுத்து 3-4 மாற்றங்கள் செய்யப்படலாம். இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய கண்டிஷன்களிலிருந்து ஆஸ்திரேலிய கண்டிஷன் மாறுபட்டது. ஆஸ்திரேலியாவில் ஆட எந்த அணி சரியாக இருக்கும் என்று ஆராய்ந்து அந்த வீரர்களுடன் இறங்குவோம் என்றார்.

88

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து இன்சைட் ஸ்போர்ட்டிடம் பேசிய தேர்வாளர் ஒருவர்,  ரோஹித் சர்மா அணி  நிர்வாகம் தரப்பிலிருந்து பேசியிருக்கிறார். ஆனால் தேர்வாளர்களான எங்களுக்கு, இந்திய அணியில் சில இடங்கள் விவாதத்துக்குள்ளானதாகவே உள்ளது. ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய இருவரின் காயம் குறித்த அப்டேட்டுக்காக காத்திருக்கிறோம். விராட் கோலி ஆசிய கோப்பையில் எப்படி ஆடுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும் என்று அந்த தேர்வாளர் கூறியிருக்கிறார்.

About the Author

KV
karthikeyan V
டி20 உலகக் கோப்பை
இந்திய கிரிக்கெட் அணி
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
சுப்மன் கில் பெஞ்சில் உட்கார வச்சதுக்கு கோபமா? இங்கிலாந்தில் பவுலிங்கில் கலக்கிய தமிழக வீரர்!
Recommended image2
ரூட் க்ளியர்! துலீப் டிராபியில் மாஸ் சதம்... இந்திய டெஸ்ட் அணிக்கு 'கம்பேக்' கொடுக்கிறாரா இஷான் கிஷன்?
Recommended image3
வைபவ் சூர்யவன்ஷியை சீண்டிய திலக் வர்மா! களத்தில் பெரும் மோதல்! வைரலாகும் வீடியோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved