Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND 2வது டெஸ்ட்டிலும் அஷ்வினை அணியில் எடுக்காதது ஏன்..? கேப்டன் கோலி விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் எடுக்கப்படாத அஷ்வின், 2வது போட்டியிலும் எடுக்கப்படாத நிலையில், அதற்கான காரணத்தை கூறியுள்ளார் கேப்டன் விராட் கோலி.
 

indian skipper virat kohli explains why ashwin did not picked by team india for second test
Author
London, First Published Aug 12, 2021, 8:25 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ததையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணிக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

இந்த போட்டியில் இந்திய அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்கியது. முதல் டெஸ்ட்டில் ஆடிய ஷர்துல் தாகூர் காயத்தால் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக சீனியர் ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். முதல் போட்டியில் ஆடாத, அணியின் சீனியர் ஸ்பின்னரான அஷ்வின் இந்த போட்டியிலாவது ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியிலும் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

எந்தவிதமான கண்டிஷனிலும் எப்பேர்ப்பட்ட சூழலிலும் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்பின்னரான அஷ்வினை, முதல் டெஸ்ட்டில் எடுக்காதது கடும் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கு உள்ளானது. அஷ்வினை எடுக்காதது இங்கிலாந்து அணிக்குத்தான் சாதகம் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

அஷ்வின் ஸ்பின் பவுலிங் மட்டுமல்லாது பேட்டிங்கும் நன்றாக ஆடக்கூடியவர். எனவே 2வது டெஸ்ட்டிலாவது அவர் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஷ்வின் இந்த போட்டியிலும் எடுக்கப்படவில்லை.

டாஸ் போட்ட பின்னர், அஷ்வின் எடுக்கப்படாதது குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, எங்கள்(இந்திய அணி) 12 வீரர்களை கொண்ட அணியில் அஷ்வின் கண்டிப்பாக இருக்கிறார். ஆனால் ஆடுகளத்தை பார்த்த பின்னர், இந்த கண்டிஷனில்  4  ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடுவது நல்லது என்பதால், அஷ்வின் எடுக்கப்படவில்லை. நாங்கள் ஒரு அணியாக அணிக்கு நல்லதை செய்கிறோம் என்றார் கேப்டன் விராட் கோலி. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios