ஐசிசி ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ரோகித் சர்மா முன்னேற்றம், விராட் கோலி சரிவு!
ஐசிசி ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியான நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா 10ஆவது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி 9ஆவது இடம் பிடித்துள்ளார்.
ஐசிசி ரேங்கிங் சர்வதேச போட்டிகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் இரு அணிகளின் முந்தைய மதிப்பீடு மற்றும் தொடரின் முடிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இரு அணிகளுக்கு ஐசிசி ரேங்கிங் புள்ளிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் போட்டி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் ஒருநாள் போட்டிகளின் வீரர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஒரு நாள் போட்டி வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் சுப்மன் கில் 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். 3ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென் நீடிக்கிறார்.
பாகிஸ்தானை விட இலங்கை உடன் தான் இந்தியா சிறப்பாக விளையாடியது – கௌதம் காம்பீர்!
இவர்களைத் தொடர்ந்து, இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் சரிந்து 8ஆவது இடத்திற்கு சென்றுள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 10ஆவது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி 9ஆவது இடம் பிடித்துள்ளார். இதே போன்று பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 7ஆவது இடம் பிடித்துள்ளார். குல்தீப் யாதவ் தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளும், இலங்கைக்கு எதிராக 4 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு புதிய சிக்கல்; காயம் காரணமாக அகா சல்மான் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகல்?