வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. 

கயானாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் நான்காம் வரிசை வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கப்பட்டுள்ளார். மற்றொரு மிடில் ஆர்டர் வீரராக ராகுலோ மனீஷ் பாண்டேவோ இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேதர் ஜாதவிற்கு மீண்டும் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குல்தீப் யாதவ் ஸ்பின்னராக சேர்க்கப்பட்டுள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், ஷமி மற்றும் கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நவ்தீப் சைனிக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. 

ராகுல், மனீஷ் பாண்டே, நவ்தீப் சைனி, சாஹல் ஆகிய நால்வருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஷமி, கலீல் அகமது.