டி20யில் எண்ட்ரி கொடுக்கும் ரிங்கு சிங், பிரசித் கிருஷ்ணா; டாஸ் வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா பீல்டிங் தேர்வு!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டப்ளின் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா பீல்டிங் தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியின் மூலமாக இந்திய அணியின் டி20 போட்டியின் 11ஆவது கேப்டனாக களமிறங்குகிறார்.
Gautam Gambhir: 2024 ஐபிஎல்லுக்கு முன்னதாக லக்னோ அணியை விட்டு விலக தயாரான கௌதம் காம்பீர்!
இந்த டி20 போட்டியின் மூலமாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இந்திய அணியில் அறிமுகமாகின்றனர். ஏற்கனவே பிரசித் கிருஷ்ணா ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இந்தியா:
ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), ரவி பிஷ்னாய்.
அயர்லாந்து:
பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பல்பிர்னி, லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட், கிரேக் யங்.
இதுவரையில், இரு அணிகளும் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா தான் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்சமாக இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. அயர்லாந்து அணி 221 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியை ஜியோ சினிமா மற்றும் Viacom18 க்கு சொந்தமான ஸ்போர்ட்ஸ் 18 இல் தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்கலாம்.