Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் வாய்ப்பு இழந்த பிருத்வி ஷா: அதிரடி காட்ட தயாரான இந்தியா டாஸ் வென்று பேட்டிங்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
 

India Won the Toss and choose to bat first against New Zealand 3rd T20I
Author
First Published Feb 1, 2023, 6:49 PM IST

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஏற்கனவே ஒரு நாள் தொடரை 0-3 என்று இழந்த நிலையில், டி20 தொடரையாவது கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்போடு விளையாடி வருகிறது. அதன்படியே முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த 2ஆவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Sports Budget 2023-24: விளையாட்டுத் துறையை விசேஷமாக கவனித்த மத்திய பட்ஜெட்! எத்தனை அறிவிப்புகள் பாருங்க!

இதன் மூலம் இரு அணிகளும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 1-1 என்ற சமநிலையில் உள்ளன. இதையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால், யுஸ்வேந்திர சகாலுக்குப் பதிலாக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்: டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் சூர்யகுமார் யாதவ்!

இந்த முறையும் பிருத்வி ஷாவிற்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. டி20 அணியில் சேர்க்கப்பட்டு, கடைசி வரையில் வெளியில் உட்கார வைக்கப்பட்டு வருகிறார். அதே போன்று, ஜித்தேஸ் சர்மா, முகேஷ் குமார் ஆகியோரும் வெளியிலேயே உட்கார வைக்கப்பட்டு வருகின்றனர். நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜாகோப் டஃபிக்குப் பதிலாக பென் லிஸ்டெர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

கையில் எலும்பு முறிவு, காயத்தையும் பொருட்படுத்தாமல் ஒரே கையால் ஆடிய ஹனுமா விஹாரி: வைரலாகும் வீடியோ!

இந்திய அணி:

சுப்மன் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் கூடா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

நியூசிலாந்து அணி:

பின் ஆலென், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், இஸ் சோதி, லக்கி பெர்குசன், பென் லிஸ்டெர் மற்றும் பிளைர் டிக்னர்

மகள் வாமிகா உடன் டிரக்கிங் சென்ற விராட் கோலி: வைரலாகும் புகைப்படங்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios