இந்தியாவில் நடந்த அனைத்து தொடர் போட்டிகளிலும் இலங்கை அணி ஒன்றை கூட கைப்பற்றாமல் ஏமாற்றமடைந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்னிலும், 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்னிலும் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமநிலை பெற்றன. இந்த நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது.

சூர்யகுமார் யாதவ் மற்றும் மனைவி டேவிஷா ஷெட்டியின் ஃபர்ஸ்ட் மீட்டிங் எப்போது தெரியுமா?

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு அதிகபட்சமாக 228 ரன்கள் எடுத்தது. இதில், இந்திய டி20 அணியின் துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிகவேகமாக ஆடி சதம் அடித்தார். 51 பந்துகளில் 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 112 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார்.

IND vs SL 3rd T20 Match: 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு டுவிட்டரில் குவியும் வாழ்த்து!

இதையடுத்து கடின இலக்கை துரத்திய இலங்கை அணியில் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 10 ஆம் தேதி கவுகாத்தி மைதானத்தில் பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

சொந்த மண்ணில் சாதித்து காட்டிய இந்தியா: இலங்கைக்கு எதிராக 19 வெற்றி!

2ஆவது ஒரு நாள் போட்டி 12 ஆம் தேதி கொல்கத்தா ஈடான் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 15 ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கிறது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

IND vs SL 3rd T20: இந்தியா நிகழ்த்திய அற்புதங்கள் என்னென்ன?

இந்த நிலையில், இதுவரையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் 25 தொடர்கள் (டெஸ்ட், ஒரு நாள், டி20) நடந்துள்ளன, இதில், இந்தியா 21 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. 4 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன. ஆனால், இலங்கை அணி ஒரு தொடரை கூட கைப்பாற்றாமல் ஏமாற்றத்துடன் தனது சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2-0 என்று தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா: டிராவில் முடிந்த 3ஆவது டெஸ்ட்!