Asianet News TamilAsianet News Tamil

ஆஸி., வீராங்கனை எலைஸ் பெர்ரியை பார்த்து கத்துக்கமா நீ..! ஹர்மன்ப்ரீத் கௌரை கடுமையாக விளாசிய முன்னாள் கேப்டன்

மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முக்கியமான கட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அசால்ட்டாக ரன் ஓடி ரன் அவுட்டானதை முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

india womens team former captain diana edulji slams harmanpreet kaur for not running fast in t20 world cup semi final
Author
First Published Feb 25, 2023, 9:47 PM IST

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும், 2வது அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும் ஃபைனலுக்கு முன்னேறின. நாளை நடக்கும் ஃபைனலில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

IND vs AUS: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு முட்டு கொடுக்கும் மேக்ஸ்வெல்..!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 172 ரன்களை குவித்தது. 173 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் டாப் 3 வீராங்கனைகள் 28 ரன்களுக்கே விக்கெட்டுகளை இழந்துவிட்டனர். 

அதன்பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 69 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து களத்தில் நன்றாக செட்டில் ஆகியிருந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 52 ரன்களுக்கு 15வது ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அவர் ஆட்டமிழந்தபோது அணியின் ஸ்கோர் 133 ரன்கள். அதன்பின்னர் மற்ற வீராங்கனைகள் கடுமையாக போராடியும் கூட, 20 ஓவரில் 167 ரன்கள் அடித்து 5 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. ஒருவேளை ஹர்மன்ப்ரீத் கௌர் ரன் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்.

ஹர்மன்ப்ரீத் கௌர் 2 ரன் ஓடும்போது 2வது ரன்னை மெதுவாக ஓடினார் என்று அவர்மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஹர்மன்ப்ரீத் கௌர் ரன் அவுட்டான விதம் சிறுபிள்ளைத்தனமானது என்று நாசர் ஹுசைன் விமர்சித்திருந்தார். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று ஹர்மன்ப்ரீத் கௌர் மறுத்திருந்தார்.

மைக் டைசன் கூற்றை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய அணிக்கு பவர்ஃபுல் பன்ச் கொடுத்த கிரேக் சேப்பல்..!

இந்நிலையில், ஹர்மன்ப்ரீத் கௌரை கடுமையாக விமர்சித்துள்ளார் மகளிர் அணி முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி. இதுகுறித்து பேசிய டயானா எடுல்ஜி, ஹர்மன்ப்ரீத் கௌர் அவரது பேட் க்ரீஸுக்கு முன் தடுமாறிவிட்டதாக அவர் நினைக்கிறார். ஆனால் அவர் 2வது ரன்னை வேகமாக ஓடவில்லை; ஜாகிங் செய்வது போல் ஓடினார்.  உங்கள் விக்கெட் எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்தும் அப்படி ரிலாக்ஸாக ஓடக்கூடாது. வெற்றி பெற வேண்டுமென்றால் தொழில்முறை கிரிக்கெட் ஆடவேண்டும். ஆஸ்திரேலிய வீராங்கனை எலைஸ் பெர்ரி 2 ரன்னை பெறுவதற்கு எப்படி டைவ் அடித்தார் என்று பாருங்கள். அதுதான் தொழில்முறை கிரிக்கெட். கடைசி வரை ஆஸ்திரேலிய அணி விட்டுக்கொடுக்கவே இல்லை. ஆனால் இந்திய அணி போராடவே இல்லை என்று டயானா எடுல்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios