காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிவருகிறது.
22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 8 வரை நடக்கிறது. காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. காமன்வெல்த்தில் மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக நடக்கும் மகளிர் கிரிக்கெட் தொடரின் வரலாற்று சிறப்புமிக்க முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் இந்த க்ரூப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிவருகிறது.
இந்திய மகளிர் அணி:
ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், மேக்னா சிங், ரேணுகா சிங்.
