Asianet News TamilAsianet News Tamil

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி அரைசதம்; இந்திய மகளிர் அணி முதல் வெற்றி!

வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

India Women Beat Bangladesh Women by 7 wickets difference in 1st T20I at Dhaka
Author
First Published Jul 10, 2023, 8:07 AM IST

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது. நேற்று வங்கதேச மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி நடந்தது.

தொடக்கம் வேண்டாம், அதிக ரன்கள் குவிக்க நடுவரிசை தான் பெஸ்ட்!

இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில், தொடக்க வீராங்கனைகளான ஷதி ராணி மற்றும் ஷமிமா சுல்தானா ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். எனினும், சுல்தானா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர், 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரும் எடுத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியின் மூலமாக பதிலடி கொடுத்த இங்கிலாந்து; கடைசி நேரத்தில் கை கொடுத்த கிறிஸ் வோக்ஸ்!

இவரைத் தொடர்ந்து ஷோபனா மோஸ்தரி களமிறங்கினார். ஆனால், ஒரு புறம் நின்னு நிதானமாக ஆடிய ராணி 26 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அதன் பிறகு வந்த கேப்டனும், விக்கெட் கீப்பருமான நிகர் சுல்தானா 2 ரன்களில் பரிதாபமாக ரன் அவுட் ஆனார்.

தோனி பிடிக்க அது தான் காரணம்: மனம் திறந்த வாசிம் ஜாஃபர்!

அடுத்து மெதுவாக ஆடி வந்த ஷோபனா மோஸ்தரி 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு, ஷோர்னா அக்தர் களமிறங்கினார். கடைசி வரை ஆடிய அக்தர் 28 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து களத்தில் நின்றார். ஆனால், மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல; ஜூஜூபி, வரலாறு சொல்லுது! 

இறுதியாக வங்கதேச மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பவுலிங்கைப் பொறுத்தவரையில், பூஜா வஸ்த்ரகர், மின்னு மணி, ஷஃபாலி வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். பின்னர் 115 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய மகளிர் அணி விளையாடியது. முதலில் களமிறங்கிய ஷஃபாலி வர்மா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது: முகமது கைஃப்!

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் நிதானமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் யாஸ்திகா பாட்டியா ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஹர்மன்ப்ரீத் கவுர், 35 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 54 ரன்கள் சேர்த்தார்.

கடைசியாக இந்திய மகளிர் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நாளை டாக்காவில் நடக்க இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios