தோனி பிடிக்க அது தான் காரணம்: மனம் திறந்த வாசிம் ஜாஃபர்!
தோனியைப் பிடிப்பதற்கு அவர் பிடித்தமானவற்றை தைரியமாக செய்யக் கூடியவர் என்பதால் தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி பற்றி முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். எம்.எஸ்.தோனி கடந்த 7 ஆம் தேதி தனது 42ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். கிரிக்கெட், சினிமா மற்றும் அரசியல் தலைவர்கள் என்று பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதில், வாசீம் ஜாஃபரும் ஒன்று. தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு தோனி பற்றிய முக்கியமான தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது: முகமது கைஃப்!
தோனிக்கு பெப்சி குடிப்பதில் எந்த விருப்பமும் கிடையாது. பெப்சி குடிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. உடல் தகுதி அடிப்படையில், அதில் நிறைய சர்க்கரை உள்ளது. மேலும், விளையாட்டு வீரர்கள் அதிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், அவர் வழக்கமாக பெப்சி அல்லது கோக் குடிப்பார். அவர் அப்படிப்பட்டவர். நீங்கள் சர்வதேச அளவில் விளையாடுவதால், அங்கு அதிக அழுத்தம் உள்ளது, நீங்கள் உங்கள் வழக்கத்தை மாற்றுகிறீர்கள் என்று அர்த்தமல்ல. அவரைப் பற்றி நான் விரும்புவது இதுதான் என்று அவர் கூறினார்.
எப்படி ஜெயிக்க வேண்டும்? இங்கிலாந்து அணிக்கு ஆலோசனை சொன்ன சச்சின் டெண்டுல்கர்!
கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றதன் மூலமாக தோனி தனது கேப்டன்ஷி வாழ்க்கையை தொடங்கினார். இதன் மூலமாக இந்தியா 2011 ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் டிராபியை வெல்ல காரணமாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் எல்லாம் ஒன்னுமே இல்ல; ஜூஜூபி, வரலாறு சொல்லுது!