இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை 2-1 என இந்திய அணி வென்ற நிலையில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது.
கெனிங்டன் ஓவலில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி ஆடவில்லை. இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால் கோலி இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் 3ம் வரிசையில் ஆடுகிறார்.
இதையும் படிங்க - 11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்
ரோஹித்துடன் அவரது நீண்டகால ஓபனிங் பார்ட்னரான தவான் இந்த போட்டியில் ஆடுகிறார். 4ம் வரிசையில் சூர்யகுமார், 5ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஆல்ரவுண்டர் ஜடேஜா என வலுவான பேட்டிங் ஆர்டரை பெற்றுள்ளது இந்திய அணி. பவுலிங்கிலும் பும்ரா, ஷமி, பிரசித் கிருஷ்ணா என வலுவான அணி காம்பினேஷனுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.
இதையும் படிங்க - ஐபிஎல்லில் ஆடும்போது ரெஸ்ட் தேவைப்படல.. இந்தியாவுக்காக ஆடுறதுனா மட்டும் வலிக்குது! சீனியர்களை விளாசிய கவாஸ்கர்
இங்கிலாந்து அணி:
ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, க்ரைக் ஓவர்டன், டேவிட் வில்லி, ப்ரைடான் கர்ஸ், ரீஸ் டாப்ளி.
