இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் 4ஆவது போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆறு அணிகள் பங்கேற்ற இந்த ஆசிய கோப்பை தொடரின் லீக் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.

IND vs PAK: கடினமாக உழைத்த மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த ரோகித் சர்மா: அந்த மனசு தான் சார் கடவுள்!

சூப்பர் 4 சுற்று:

இதையடுத்து இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில், இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், பாகிஸ்தான் ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. வங்கதேச அணி விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. எனினும், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டி வரும் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இதில், வங்கதேச அனி ஜெயித்தாலும் பலனிலில்லை.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி: பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்; மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!

புள்ளிப் பட்டியல்:

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அந்த வகையில் தற்போது இந்திய அணி அதிக ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இலங்கை 2ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 3ஆவது இடத்திலும் உள்ளது. வங்கதேச அணி கடைசி இடத்தில் உள்ளது.

இந்தியா – இலங்கை பலப்பரீட்சை:

கொழும்புவில் இன்று நடக்கும் 4ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில், இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இல்லை இலங்கை வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதோடு, இறுதிப் போட்டிக்கு முன்னேற அடுத்து நடக்க உள்ள வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற கட்டாயம் ஏற்படும்.

Pakistan vs India Super Fours 3rd Match: பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் இந்தியா சாதனை வெற்றி!

இந்தியா 96 போட்டி வெற்றி:

இதுவரையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய 165 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 96 போட்டிகளிலும், இலங்கை 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், 11 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதில், ஹோம் மைதானத்தில் 39 போட்டியிலும், அவே மைதானத்தில் 30 போட்டியிலும், பொதுவான இடங்களில் நடத்தப்பட்ட போட்டியில் இந்தியா 27 போட்டிகளிலும் என்று மொத்தமாக 96 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

PAK vs IND: நாங்க தான் கெத்துன்னு ஆட்டம் போட்ட பாகிஸ்தான்; குல்தீப் சுழலில் மொத்தமா சரண்டர்: இந்திய வெற்றி!

இலங்கை தொடர்ந்து 13 ஒரு நாள் போட்டி வெற்றி:

இதுவே, இலங்கை அதனுடைய சொந்த மைதானத்தில் நடந்த 28 போட்டிகளிலும், அவே மைதானங்களில் 12 போட்டிகளிலும் பொதுவான இடங்களில் நடத்தப்பட்ட 17 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், இலங்கை கடைசியாக நடந்த 13 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சாதனையை இந்தியா முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PAK vs IND:ஜடேஜா பந்தில் முகத்தில் அடி வாங்கிய அகா சல்மான்: ரத்தம் வந்ததைப் பார்த்து பாக், வீரர்கள் அதிர்ச்சி!

நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரா போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதே பலத்துடன் இன்றைய போட்டியிலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரில் முதல் முறையாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.