இந்தியா – ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் கன்ஃபார்ம்!
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது. இதையடுத்து, ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்தியா, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்று அங்கு 2 நாள் பயிற்சி போட்டிகளில் விளையாடிய நிலையில், தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த நிலையில், நேற்று மும்பையில் அபெக்ஸ் கவுன்சில் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்க இருந்தது. ஆனால், அதன் பிறகு இந்தப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
ஜெய் தோனி, ஜெய் ஜெய் தோனி; 77 அடி உயர கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்!
இந்தநிலையில் தான் கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் ஜனவரி 2024 ல் நடக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. மேலும், அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடக்கும் இருதரப்பு அணிகளுக்கு இடையிலான புதிய ஊடக உரிமைகள் ஒப்பந்தம் ஆகஸ்ட் இறுதிக்குள் கையெழுத்திடப்படும் என்று ஜெய் ஷா உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இருதரப்பு ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் உலகக் கோப்பைக்கு பிறகு நடக்க உள்ள 5 டி20 போட்டிகள் கொண்ட ஒரு டி20 தொடரின் மூலமாக தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி பங்கேற்பதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. பிசிசிஐ ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளை ஆசிய விளையாட்டு போட்டிக்கு அனுப்ப தயாராகியுள்ள நிலையில், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக முழு இந்திய மகளிர் பயிற்சியாளர்களையும் அறிவிக்கும் என்றும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.