IND vs PAK: பாகிஸ்தானை பந்தாடிய டீம் இந்தியா – சம்பவம் செய்த கேஎல் ராகுல் 111*, விராட் கோலி 122* ரன்கள்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்துள்ளது.

India Scored 356 Runs against Pakistan in Asia Cup 2023 Super Fours 3rd Match at Colombo rsk

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டி கொழும்பு மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியானது மழையால் தள்ளி வைக்கப்பட்டது. நேற்று 24.1 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. இதில், ரோகித் சர்மா 56 ரன்னும், சுப்மன் கில் 58 ரன்னும் எடுத்திருந்தனர்.

India vs Pakistan, Virat Kohli: இது கோலியோட கோட்டை; சதமும் அடிச்சு, 13,000 ரன்களையும் கடந்து சாதனை படைத்த கிங்

விராட் கோலி 8 ரன்னுடனும், கேஎல் ராகுல் 17 ரன்னுடனும் இன்றைய போட்டியை தொடங்கினர். மழையின் காரணமாக இன்றைய போட்டி தாமதமாக தொடங்கியது. விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். விக்கெட்டை மட்டுமே இழக்கவே கூடாது என்று பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

கேஎல் ராகுல் மட்டும் அடிக்கடி பவுண்டரி விளாசினார். ஒரு கட்டத்தில் ராகுல் தனது 14 ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே போன்று கோலியும் தனது 66ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் இருவரும் அதிரடியாக விளையாடினர். ஒரு கட்டத்தில் கேஎல் ராகுல் ஒரு நாள் போட்டியில் தனது 6ஆவது சதத்தை நிறைவு செய்தார். 100 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரியும், 2 சிக்ஸரும் விளாசினார். பின்னர், விராட் கோலி 97 ரன்கள் எடுத்திருந்த போது 2 ரன்கள் எடுத்து சர்வதேச போட்டியில் 13000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தார்.

திரும்ப வந்துட்டேனு சொல்லு, ஃபிட்டா தான் இருக்கேனு சொல்லி 100 பந்துகளில் 100 அடித்து அசத்திய கேஎல் ராகுல்!

இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸில் 13000 ரன்கள் அடித்திருந்தார். ஆனால், விராட் கோலி 267 இன்னிங்ஸில் 13000 ரன்களை கடந்துள்ளார். ரிக்கி பாண்டிங்கும் 341 இன்னிங்ஸில் 13000 ரன்கள் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஒரு நாள் போட்டியில் 47ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். கடைசியாக விராட் கோலி 94 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று கேஎல் ராகுலும் 106 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 111 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

காயத்திலிருந்து மீண்டு வந்து முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த கேஎல் ராகுல்!

இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்துள்ளது. இதற்கு முன்னதாக முதல் லீக் போட்டியில் நேபாள் அணிக்கு எதிரான பாகிஸ்தான் 342 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி அதிகபட்ச ஸ்கோரை எட்டியுள்ளது. இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்திருந்தது. அதில், எம்.எஸ்.தோனி 148 ரன்கள் எடுத்திருந்தார்.

India vs Pakistan Super Fours, Haris Rauf: ஹரிஷ் ராஃப் காயம்; எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க சென்றதாக அறிவிப்பு!

இந்தப் போட்டியில் இந்திய அணி படைத்த சாதனைகள்:

அதிகபட்ச ஒரு நாள் போட்டி ரன்கள்

சச்சின் டெண்டுல்கர் – 18426 ரன்கள்

குமார் சங்கக்காரா – 14232 ரன்கள்

ரிக்கி பாண்டிங் – 13704 ரன்கள்

சனத் ஜெயசூர்யா – 13430 ரன்கள்

விராட் கோலி – 13024 ரன்கள்

பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்:

233* ரன்கள் - விராட் கோலி – கேஎல் ராகுல், கொழும்பு (3ஆவது விக்கெட்) -2023

231 ரன்கள் – என்.எஸ்.சித்து – எஸ்.ஆர்.டெண்டுல்கர், ஷார்ஜா (2ஆவது விக்கெட்) - 1996

210 ரன்கள் – ஷிகர் தவான் – ரோகித் சர்மா, துபாய் (முதல் விக்கெட்) 2018

201 ரன்கள் – ராகுல் டிராவிட் – வீரேந்திர சேவாக், கொச்சி (3ஆவது விக்கெட்), 2005

குறைந்த இன்னிங்ஸில் ஒருநாள் போட்டியில் 13000 ரன்கள் கடந்த வீரர்கள்:

267 இன்னிங்ஸ் – விராட் கோலி

321 இன்னிங்ஸ் – சச்சின் டெண்டுல்கர்

341 இன்னிங்ஸ்- ரிக்கி பாண்டிங்

363 இன்னிங்ஸ் – குமார் சங்கக்காரா

416 இன்னிங்ஸ் – சனத் ஜெயசூர்யா

கொழும்பு மைதானத்தில் விராட் கோலி எடுத்த கடைசி 4 போட்டி ரன்கள்!

128* ரன்கள் (119)

131 ரன்கள் (96)

110* ரன்கள் (116)

122* ரன்கள் (94) - 2023

ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்

 

233 – விராட் கோலி – கேஎல் ராகுல்- பாகிஸ்தான், கொழும்பு, 2023

224 ரன்கள் – முகமது ஹபீஸ் – ஜாம்ஷெட் - இந்தியா, 2012

223 ரன்கள் – சோயிப் மாலிக் – யூனிஸ் கான் – ஹாங்காங், 2004

214 ரன்கள் – பாபர் அசாம் – இப்திகார் அகமது – நேபாள், 2023

ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள்:

6 சதங்கள் – சனத் ஜெயசூர்யா

4 – விராட் கோலி

4 – குமார் சங்கக்காரா

3 – சோயிப் மாலிக்

இந்திய அணியில் நம்பர் 3 மற்றும் நம்பர் 4 வரிசையில் ஒரு நாள் போட்டியில் சதம்:

ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் – கென்யா, 1999

கௌதம் காம்பீர் மற்றும் விராட் கோலி – இலங்கை, 2009

விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் – பாகிஸ்தான், கொழும்பு - 2023

Asia Cup India vs Pakistan: மழை இல்லை; ஓவர்கள் குறைக்கப்பட்டதா? போட்டி 4.40 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios