ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர் கம்பேக்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

india odi squad announced for the tour of zimbabwe

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, ஜிம்பாப்வேவுக்கு சென்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

எனவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை போலவே ஷிகர் தவான் கேப்டன்சி செய்கிறார். ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில் ஆகிய இருவரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.
தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஆகிய இருவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக எடுக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் எடுக்கப்பட்டனர். 

காயத்தால் ஐபிஎல்லில் இருந்தே ஆடாத தீபக் சாஹர் காயத்திலிருந்து மீண்டதால் மீண்டும் இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளார். தீபக் சாஹரை போலவே காயத்திலிருந்து மீண்ட வாஷிங்டன் சுந்தரும் இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகிய மூவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஷர்துல் தாகூர், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோரும் எடுக்கப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios