சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தனக்கு, பிரதமர் நரேந்திர மோடி கூறிய வாழ்த்துக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார் மிதாலி ராஜ். 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த வீராங்கனை மிதாலி ராஜ். 1999ம் ஆண்டிலிருந்து சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக ஆடிவந்த மிதாலி ராஜ், 12 டெஸ்ட், 232 ஒருநாள், 89 டி20 போட்டிகளில் ஆடி முறையே, 699, 7805, 2364 ரன்களை குவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீராங்கனைகளில் ஒருவர். 23 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி, மகளிர் கிரிக்கெட்டில் சாதனைகள் பல படைத்த மிதாலி ராஜ், நேற்று(ஜூன்8) அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார்.

இதையும் படிங்க - ENG vs IND: தோனியின் சாதனை காலி.. எட்ஜ்பாஸ்டன் சதம் மூலம் ரிஷப் பண்ட் படைத்த சாதனைகளின் பட்டியல்

மிதாலி ராஜின் ஓய்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். கடந்த ஜூன் 29ம் தேதி பிரதமர் மோடி மிதாலி ராஜுக்கு தெரிவித்திருந்த வாழ்த்து செய்தியில், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக 20 ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்காற்றிய உங்களுக்கு (மிதாலி ராஜ்) எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நூற்றுக்கணக்கான இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு நீங்கள் ரோல் மாடல். 

2017 உலக கோப்பை ஃபைனலில் இந்திய அணி வெற்றியை நெருங்கியது. நெருக்கடியான அந்த தருணத்தை நீங்கள் மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும், பொறுமையாகவும் கையாண்ட விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. கொரோனா நெருக்கடியான நேரத்தில், உங்களது பிசியான கிரிக்கெட் பணிகளுக்கு மத்தியிலும் மக்களுக்காக நேரம் ஒதுக்கி உதவி செய்தது பாராட்டுக்குரியது. உங்கள் வாழ்வில் 2வது இன்னிங்ஸை தொடங்கவுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி வாழ்த்து கூறியிருந்தார்.

இதையும் படிங்க - தோனிக்கு ஒரு பைக் கொடுத்தோம்; பைக்கை கொடுத்த அடுத்த செகண்ட் தோனியை காணும்! ஸ்ரீநிவாசன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து டுவீட் செய்துள்ள மிதாலி ராஜ், பல கோடி மக்களின் முன்னுதாரணமாக திகழும் பிரதமரே எனக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் மிதாலி ராஜ்.

Scroll to load tweet…