Asianet News TamilAsianet News Tamil

ENG vs IND: தோனியின் சாதனை காலி.. எட்ஜ்பாஸ்டன் சதம் மூலம் ரிஷப் பண்ட் படைத்த சாதனைகளின் பட்டியல்

இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் சதமடித்ததன் மூலம் ரிஷப் பண்ட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
 

rishabh pant records list after scoring a century against england in edgbaston test
Author
Edgbaston, First Published Jul 2, 2022, 2:26 PM IST

இங்கிலாந்து - இந்தியா இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில்  பேட்டிங் ஆடிவருகிறது.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி 98 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஷுப்மன் கில், புஜாரா, விஹாரி, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய 5 விக்கெட்டுகளை 98 ரன்களுக்கே இழந்துவிட்டது. 

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிஷப் பண்ட் சதமும், ஜடேஜா அரைசதமும் அடித்தனர். ரிஷப்பும் ஜடேஜாவும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர்.

இதையும் படிங்க - தோனிக்கு ஒரு பைக் கொடுத்தோம்; பைக்கை கொடுத்த அடுத்த செகண்ட் தோனியை காணும்! ஸ்ரீநிவாசன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

89 பந்தில் சதமடித்த ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷர்துல் தாகூரும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை குவித்துள்ளது. ஜடேஜா 83 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் ஷமி களத்தில் உள்ளார்.

இந்த போட்டியில் 89 பந்தில் சதமடித்து அசத்திய ரிஷப் பண்ட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

ரிஷப் பண்ட் சாதனை பட்டியல்:

1. இந்த போட்டியில் 89 பந்தில் சதமடித்ததன் மூலம், டெஸ்ட்டில் அதிவேக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் 2006ல் தோனி, பாகிஸ்தானுக்கு எதிராக 92 பந்தில் சதமடித்திருந்தார். அதுவே இந்திய விக்கெட் கீப்பரின் அதிவேக சதமாக இருந்தது. அந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்! முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா; 3ம் இடத்தில் இந்தியா

2. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 23 போட்டிகளில் வெளிநாட்டில் 4 சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார் ரிஷப் பண்ட். இதற்கு முன் இந்திய அணியின் அனைத்து விக்கெட் கீப்பர்களும் சேர்த்தே வெளிநாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாகவே 4 சதங்கள் தான் அடித்துள்ளனர். ரிஷப் பண்ட் இங்கிலாந்து 2, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் தலா 1 என மொத்தம் வெளிநாட்டில் டெஸ்ட்டில் 4 சதங்கள் அடித்துள்ளார்.

3. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக(வயது அடிப்படையில்) 2000 ரன்களை குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். 24 வயதில் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை எட்டியுள்ளார். இதுதான் சர்வதேச டெஸ்ட்டில் ஒரு வீரர் இளம் வயதில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியது ஆகும்.

4. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவிற்கு வெளியே அதிவேக சதம் அடித்ததில் ரிஷப் பண்ட், சேவாக் மற்றும் அசாருதீனுக்கு அடுத்த 3வது இடத்தை பிடித்துள்ளார். சேவாக் 2006ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்டில் 78 பந்தில் அடித்து சதமே, இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. 1990ல் லண்டன் லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக அசாருதீன் 88 பந்தில் சதமடித்திருக்கிறார். அது 2ம் இடம். இப்போது இங்கிலாந்து எட்ஜ்பாஸ்டனில் ரிஷப் பண்ட் 89 பந்தில் அடித்த சதம் 3ம் இடம் வகிக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios