Asianet News TamilAsianet News Tamil

ஹாங்காங்கை துட்சமாக நினைக்காதீங்க..! 2018 ஆசிய கோப்பையில் நடந்ததை இந்திய அணி மறக்க வேண்டாம்

ஆசிய கோப்பையில் இன்று ஹாங்காங்கை எதிர்கொள்ளும் இந்திய அணி ஹாங்காங்கை எளிதாக எடைபோட்டுவிடக்கூடாது. 2018 ஆசிய கோப்பையில் நடந்ததை மறந்துவிடக்கூடாது.
 

india can not underestimate hong kong because here is what happened in 2018 asia cup
Author
First Published Aug 31, 2022, 6:52 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 2  அணிகளையும் வீழ்த்தி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 

ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில், இன்று ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதும் போட்டி ஹாங்காங்கில் நடக்கிறது. 

இதையும் படிங்க - Asia Cup: ஜெயித்த இந்தியா, தோற்றுப்போன பாகிஸ்தான் 2 அணிகளுக்கும் ஆப்பு அடித்த ஐசிசி

இந்திய அணி எந்த அணியையும் குறைத்து மதிப்பிடாது. ஏனெனில் அந்த குறிப்பிட்ட தினத்தில் எந்த அணி நன்றாக ஆடுகிறது என்பதை பொறுத்தே போட்டியின் முடிவு அமையும். எனவே அந்தவகையில், ஹாங்காங் அணியை இந்திய அணி குறைத்து மதிப்பிடாது; மதிப்பிடவும் கூடாது.

ஏனெனில் 2018 ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு ஹாங்காங் அணி செம டஃப் ஃபைட் கொடுத்தது. 2018 ஆசிய கோப்பை தொடர் ஒருநாள் போட்டி தொடராக அமைந்தது. ரோஹித் சர்மா கேப்டன்சியில் தான் இந்திய அணி அந்த ஆசிய கோப்பையிலும் ஆடியது.

இந்தியா - ஹாங்காங் இடையே 2018 ஆசிய கோப்பையில் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ஷிகர் தவானின் அபாரமான சதத்தால் (127) 50 ஓவரில் 285 ரன்களை குவித்தது.

286 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஹாங்காங் அணியின் தொடக்க வீரர்கள் நிஸாகத் கான் (92) மற்றும் அன்ஷுமான் ராத் (73) ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 34 ஓவரில் 174 ரன்களை குவித்தனர். 34 ஓவர் வரை முதல் விக்கெட்டை கூட வீழ்த்த முடியாத இந்திய அணி பீதியடைந்தது. ஆனால் குல்தீப்பும் கலீல் அகமதுவும் அவர்கள் இருவரையும் வீழ்த்த, அதன்பின்னர் ஹாங்காங் பேட்டிங் ஆர்டர் சரிந்தது.

இதையும் படிங்க - சூர்யகுமார் யாதவுக்கு முன் என்னை பேட்டிங் ஆட இறக்கிவிட்டதற்கு இதுதான் காரணம்..! ஜடேஜா விளக்கம்

கடைசியில் 50 ஓவரில் 259 ரன்களை ஹாங்காங் அணி அடிக்க, 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், ஹாங்காங் அணி இந்திய அணிக்கு தோல்வி பயத்தை காட்டியது. எனவே அனுபவம் இல்லாத அணியாக இருந்தாலும், ஹாங்காங் அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios