Asianet News TamilAsianet News Tamil

India vs Sri Lanka: இலங்கை 55 ரன்னுக்கு ஆல் அவுட் – முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா!

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பையின் 33ஆவது லீக் போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

India Beat Sri Lanka by 302 runs difference in 33rd World Cup Match at Wankhede Stadium rsk
Author
First Published Nov 2, 2023, 9:12 PM IST | Last Updated Nov 2, 2023, 9:12 PM IST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் தில்ஷன் மதுஷங்கா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

IND vs SL: ஓபனர்ஸ் 2 பேரும் கோல்டன் டக் அவுட்: உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக மோசமான சாதனை படைத்த இலங்கை!

பின்னர் கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் பதும் நிசாங்கா முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அந்த ஓவரில் பும்ரா 2 வைடுகள் வீசினார். பின்னர் சிராஜ் தனது முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே கோல்டன் டக் முறையில் சிராஜ் பந்தில் எல்பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

India vs Sri Lanka: தட்டி தூக்கிய பும்ரா, சிராஜ் – 2 ஓவரிலும் முதல் பந்திலேயே விக்கெட்; தத்தளிக்கும் இலங்கை!

அதே ஓவரின் 5ஆவது பந்தில் சதீரா சமரவிக்ரமா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் மறுபடியும், சிராஜ் வீசிய 3.1 ஆவது ஓவரில் கேப்டன் குசால் மெண்டிஸ் ஒரு ரன்னில் கிளீன் போல்டானார். அப்போது இலங்கை அணி 3.1 ஓவரில் 3 ரன்னுக்கு 4 விக்கெட்டுகள் எடுத்திருந்தது.

India vs Sri Lanka: கில், கோலி பொறுப்பான ஆட்டம்; ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியால் இந்தியா ரன்கள் குவிப்பு!

அடுத்து வந்த சரித் அசலங்கா 24 பந்துகளில் 1 ரன் எடுத்து ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அடுத்த பந்தில் துஷாந்த் ஹேமந்தா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த துஷ்மந்தா சமீரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடைசியாக ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த கசுன் ரஜீதா 14 ரன்களில் வெளியேறினார். தில்ஷன் மதுஷங்கா 5 ரன்களில் ஆட்டமிழக்க, மகீஷ் தீக்‌ஷனா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரிஸ்க் எடுக்காத சுப்மன் கில் - சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 92 ரன்களில் அவுட்!

இறுதியாக இலங்கை 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக உலகக் கோப்பையில் 3ஆவது முறையாக ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

IND vs SL: எனக்கு ஒன்னும் தெரியாது, நீங்களே பார்த்துக் கோங்க: கிரிக்கெட் வர்ணனை செய்த நீயா நானா கோபிநாத்!

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதோடு முதல் அணியாக 14 புள்ளிகளுடன் அரையிறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios