டி20 உலக கோப்பை: கடைசி ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய ஷமி.. பயிற்சி போட்டியில் ஆஸி.,யை வீழ்த்தி இந்தியா வெற்றி

டி20 உலக கோப்பை பயிற்சி போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

india beat australia by 6 runs in t20 world cup warm up match

டி20 உலக கோப்பை தகுதிப்போட்டிகள் நடந்துவருகின்றன. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. நேரடியாக சூப்பர் 12 சுற்றில் ஆடும் 8 அணிகள் பயிற்சி போட்டிகளில் ஆடிவருகின்றன.

இன்று பிரிஸ்பேனில் நடந்த பயிற்சி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதையும் படிங்க - ஐபிஎல் அணிகளுக்கு அதிரடி உத்தரவு.. தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட கெடு விதிப்பு

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 33 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்களை குவித்தார். சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். சூர்யகுமார் 33 பந்தில் 50 ரன்கள் அடித்தார். கேப்டன் ரோஹித் சர்மா (15), விராட் கோலி(19), ஹர்திக் பாண்டியா(2) சோபிக்கவில்லை. தினேஷ் கார்த்திக் 14 பந்தில் 20 ரன்கள் அடித்தார். அஷ்வின் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். இதையடுத்து 20 ஓவரில் 186 ரன்களை குவித்தது இந்திய அணி.

187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் மிட்செல் மார்ஷ் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். மிட்செல் மார்ஷ் 18 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் வார்னர் ஆடாததால் ஸ்மித் ஆட வாய்ப்பு பெற்றார். ஆனால் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.

க்ளென் மேக்ஸ்வெல்(23), மார்கஸ் ஸ்டோய்னிஸ்(7), டிம் டேவிட்(5) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். அதிரடியாக ஆடிய கேப்டனும் தொடக்க வீரருமான ஆரோன் ஃபின்ச், 54 பந்தில் 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 19 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 176 ரன்களை அடித்திருக்க, கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.

19 ஓவர்களில் ஒரு ஓவர் கூட வீசிராத முகமது ஷமியிடம் 20வது ஓவரை கொடுத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. பும்ரா ஆடாத நிலையில், டெத் ஓவர் கவலை இந்திய அணிக்கு இருந்தது. இந்நிலையில், இந்த போட்டியில் நேரடியாக கடைசி ஓவரை ஷமியிடம் கொடுத்து, 11 ரன்களை கட்டுப்படுத்து என்று கேப்டன் ரோஹித் கொடுத்தார்.

இதையும் படிங்க - ஃபாஸ்ட் பவுலர்கள் படுமோசம்.. பேட்டிங் அதைவிட மோசம்..! நமீபியாவிடம் தோற்ற இலங்கையை வெளுத்து வாங்கிய மலிங்கா

முதல் 2 பந்தில் 4 ரன்களை வழங்கிய ஷமி, அடுத்த 4 பந்திலும் விக்கெட் வீழ்த்தினார். அதில் 3 விக்கெட் அவர் வீழ்த்தியவை. ஒரு ரன் அவுட். ஆக மொத்தத்தில் கடைசி ஓவரில் 4 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார் ஷமி. அதனால் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios