ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 273 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 9 ஆவது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி 80 ரன்களும், அஷ்மதுல்லா உமர்சாய் 62 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் கைப்பற்றினார்.

IND vs AFG: ஆஸிக்கு எதிராக டக் அவுட்: கடுமையான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா 131 ரன்கள்!

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, இந்தப் போட்டியில் 22 ரன்கள் எடுத்ததன் மூலமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் 19 இன்னிங்ஸ்கில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

IND vs AFG:556 சிக்சர்கள், சதங்கள் 7, அதிவேக சதம், 1000 ரன்கள் – எல்லா சாதனைகளையும் படைத்த ரோகித் சர்மா!

அதோடு, 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். மேலும், இந்தப் போட்டியில் சதமும் விளாசியுள்ளார். சர்மா, 63 பந்துகளில் சதம் அடித்து உலகக் கோப்பையில் தனது 7ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். அதோடு, ஒரு நாள் போட்டிகளில் 31 சதங்களும் அடித்துள்ளார். இதற்கிடையில் முதல் உலகக் கோப்பையில் 2ஆவது போட்டியில் விளையாடிய இஷான் கிஷான் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

IND vs AFG: உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த ரோகித் சர்மா!

அதன் பிறகு விராட் கோலி களமிறங்கினார். இதில், ரோகித் சர்மா சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாச இந்திய அணி 30 ஓவர்களில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 84 பந்துகளில் 16 பவுண்டரி 5 சிக்சர்கள் உள்பட 131 ரன்கள் சேர்த்து ரஷீத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அவர், 25 ரன்கள் எடுக்க, விராட் கோலி கடைசியாக 2 ரன்கள் எடுக்க ஒரு நாள் போட்டிகளில் 68 ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து பவுண்டரி அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.

ஆட்டம் காட்டிய ஹஷ்மதுல்லா, உமர்சாய் – ஆப்கானிஸ்தான் 272 ரன்கள் குவிப்பு, பும்ரா 4 விக்கெட்!

இதன் மூலமாக இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 273 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி குறைந்த ஓவர்களில் வெற்றி பெற்றதன் மூலமாக நெட் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா 2 ஆவது இடம் பிடித்துள்ளது.

Happy Birthday Hardik Pandya: மைதானத்திலேயே கேக் வெட்டி 30ஆவது பிறந்தநாள் கொண்டாடிய ஹர்திக் பாண்டியா!