செப்டம்பர் 2ல் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை: ஆசிய கோப்பை அட்டவணை இன்று இரவு வெளியாக வாய்ப்பு!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி மோதுகின்றன.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் போட்டிக்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் ஆசிய கோப்பை தொடரில் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து இந்தியா முக்கியமான 2 தொடர்களில் விளையாடுகிறது. அது தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தான்.
ஆசிய கோப்பை 2023: கேஎல் ராகுல் இடம் பெற வாய்ப்பில்லை?
அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாள் ஆகிய 6 அணிகள் மோதுகின்றன. வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்குகிறது. ஆசிய கோப்பை தொடரின் முதல் பொட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன.
ஏன், எதற்கு நீக்கப்பட்டேன்: ஒன்னுமே புரியல; புழம்பி தவிக்கும் பிரித்வி ஷா!
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி கொழும்புவில் நடக்க இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய 3 அணிகள் குரூப் ஏ பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 3 அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம் பெற்று மற்ற அணிகளுடன் மோதும். இதில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
செப்டம்பர் 3ஆம் தேதி வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. செப்டம்பர் 5ஆம் தேதி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. எனினும், முறையான ஆசிய கோப்பை அட்டவணை இன்று இரவு 7.30 மணிக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாப்பாடு நல்லா இருக்காதா? டார்க் சாக்லேட் வாங்கிய இஷான் கிஷான்: வைரலாகும் வீடியோ!