ஆசிய கோப்பை 2023: கேஎல் ராகுல் இடம் பெற வாய்ப்பில்லை?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் கேஎல் ராகுல் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

KL Rahul is unlikely to make it to the Asia Cup 2023

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை டிரினிடாட்டில் தொடங்குகிறது.

ஏன், எதற்கு நீக்கப்பட்டேன்: ஒன்னுமே புரியல; புழம்பி தவிக்கும் பிரித்வி ஷா!

வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தியா அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் நடக்கிறது.

ஜெனிவாவில் நடந்த புகைப்படக் கண்காட்சியில் இடம் பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஸ்மிதா மான்சி ஜெனாவின் புகைப்படம்!

அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து இந்திய அணிக்கு ஆசிய கோப்பை 2023 மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. பாகிஸ்தான் நடத்தும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியாவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்தியா, பாகிஸ்தான் சென்று ஆசிய கோப்பை 2023 போட்டியில் விளையாட மறுப்பு தெரிவித்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டது. பாகிஸ்தானில், நேபாள், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதும் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் ஹைபிரிட் முறைப்படி இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சாப்பாடு நல்லா இருக்காதா? டார்க் சாக்லேட் வாங்கிய இஷான் கிஷான்: வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில், இந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக இருந்த கேஎல் ராகுல், நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரி லக்னோ அணியின் கேப்டனாக இருந்த நிலையில், வலது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டு, ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு, லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெறவில்லை.

தற்போது கூட வெஸ்ட் இண்டீஸ் தொடரிலு இடம் பெறவில்லை. அடுத்து நடக்க உள்ள அயர்லாந்து தொடரிம் அவர் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் கேஎல் ராகுல் உடல் தகுதி குறித்து எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை.

பிரையன் லாராவை மாற்றும் முயற்சியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அதிரடி முடிவு எடுக்கும் காவ்யா மாறன்!

இதன் காரணமாக அவர் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் இடம் பெறுவது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், வெஸ்ட் இண்டீஸ் செல்ல இருக்கிறார். அங்கு, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை அழைத்து பேச இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios