2023 ஆசிய கோப்பை: ஒரே குழுவில் இந்தியா - பாகிஸ்தான்..! 2023 - 2024ம் ஆண்டுக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு
2023-2024ம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி அட்டவணையை வெளிப்படுத்தியுள்ளது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில். 2023 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.
2023 - 2024ம் ஆண்டுக்கான ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கான முழு போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.
2023ம் ஆண்டு நடக்கும் ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் ஒரு குழுவிலும், மற்றொரு குழுவில் ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுடன் குவாலிஃபையரில் வெற்றி பெற்று ஒரு அணியும் இடம்பெறும். லீக் சுற்றில் 6 அணிகள் மோதி, அவற்றில் 4 அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதும்.
ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை பண்ணுங்க..! இந்திய அணிக்கு கம்பீர் உருப்படியான அட்வைஸ்
வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை என்ற பெயரில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, வங்கதேசம் ஏ உள்ளிட்ட ஆசிய ஏ அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை தொடர் ஜூலை மாதம் நடக்கவுள்ளது. அக்டோபர் மாதம் அண்டர் 19 ஆசிய கோப்பை தொடர் நடக்கிறது.
மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடர் செப்டம்பரில் நடக்கிறது. வளர்ந்துவரும் மகளிர் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரில் ஏ அணிகள் மோதும்.
ஹாட்ரிக் நோ - பால்.. டி20 கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்