ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை பண்ணுங்க..! இந்திய அணிக்கு கம்பீர் உருப்படியான அட்வைஸ்
ஒருநாள் உலக கோப்பையை இந்திய அணி ஜெயிக்க வேண்டுமென்றால், கோர் அணியை உறுதி செய்து, முடிந்தவரை அந்த 11 வீரர்களுடன் அனைத்து போட்டிகளிலும் ஆடவேண்டும் என்று கௌதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய அணி 2013ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையை ஜெயித்ததே இல்லை. 2011ல் ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணி, 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன்பின்னர் 2014 டி20 உலக கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் ஃபைனல் வரை சென்று கோப்பையை இழந்தது.
2019 ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று தொடரை விட்டு வெளியேறிய இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது.
ஹாட்ரிக் நோ - பால்.. டி20 கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்
2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் நடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொடர்களிலும் தோற்று இந்திய அணி ஏமாற்றமளித்தது. 2022 டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து அதிருப்தியளித்தது.
இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால், ஒரு உலக கோப்பையை வெல்ல வேண்டியது அவசியம். அந்தவகையில், இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடப்பதால், சொந்த மண்ணில் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது. ஒருநாள் உலக கோப்பைக்காக 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்துள்ளது பிசிசிஐ. அந்த 20 வீரர்கள் தான் இந்த ஆண்டு நடக்கும் ஒருநாள் போட்டிகளில் சுழற்சி முறையில் களமிறக்கப்படவுள்ளார்கள்.
இந்நிலையில், இந்திய அணி ஒருநாள் உலக கோப்பையை வெல்ல என்ன செய்யவேண்டும் என்று கௌதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், உலக கோப்பையில் மட்டும் சிறந்த ஆடும் லெவனுடன் களமிறங்கினால் போதும் என்ற மனநிலையில், மற்ற டி20 போட்டிகளில் முக்கியமான வீரர்களுக்கு ஓய்வளித்தது இந்திய அணி நிர்வாகம். உலக கோப்பையில் மட்டும் சிறந்த ஆடும் லெவனை இறங்கவைத்தால் போதும் என்று நினைத்து, டி20 உலக கோப்பையில் இந்திய அணி இறக்கிவிட்டது சிறந்த ஆடும் லெவன் கிடையாது. கோர் அணியுடன் டி20 உலக கோப்பைக்கு முன் டி20 போட்டிகளில் ஆடாததுதான் இந்திய அணி கடைசி 2 டி20 உலக கோப்பைகளிலும் தோற்க காரணம்.
அதே தவறை ஒருநாள் போட்டிகளிலும் செய்யக்கூடாது. 3 ஃபார்மட்டிலும் தொடர்ச்சியாக ஆடும் வீரர்களுக்கு ஓய்வளிக்கலாம். ஆனால் ஒருநாள் உலக கோப்பை நெருங்குவதால் அவர்களுக்கு டி20 போட்டிகளில் மட்டுமே ஓய்வளிக்க வேண்டும். கோர் அணியை உறுதி செய்து முடிந்தவரை ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் ஆடவேண்டும். வேண்டுமென்றால் வீரர்கள் ஐபிஎல்லில் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். ஐபிஎல் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. உலக கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடக்கிறது. எனவே உலக கோப்பைக்குத்தான் வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.