India vs Netherlands:மழையால் 2 வார்ம் அப் போட்டியும் ரத்து: நேரடியாக உலகக் கோப்பையில் விளையாடும் டீம் இந்தியா!

மழையின் காரணமாக திருவனந்தபுரட்ம் மைதானத்தில் இன்று நடக்க இருந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான வார்ம் அப் போட்டியானது ரத்து செய்யப்பட்டுள்ளது.Cri

India and Netherlands 9th Warm Up Match was Called off due to rain at Thiruvananthapuram rsk

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 நாளை மறுநாள் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற 10 அணிகளும் 2 வார்ம் அப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. கடந்த 29 ஆம் தேதி முதல் வார்ம் அப் போட்டிகள் நடந்து வருகின்றன.

உலகக் கோப்பையை வெல்வது யார்? முந்தைய 3 WC வெற்றியாளர்களை கணித்த ஜோதிடரின் கணிப்பு என்ன?

இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான கவுகாத்தியில் நடக்க இருந்த 4ஆவது வார்ம் அப் போட்டியானது டாஸ் போடப்பட்ட நிலையில், மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியா திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றது. திருவனந்தபுரம் மைதானத்தில் இன்று பிற்பகல் நடக்க இருந்த 9ஆவது வார்ம் அப் போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

AG 2023:5000மீ தடகளப் போட்டியில் இந்தியா வீராங்கனை பருல் சௌத்ரிக்கு தங்கம், இந்தியா 14 தங்கத்துடன் 4ஆவது இடம்!

இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையிலான 9ஆவது வார்ம் அப் போட்டியானது டாஸே போடாத நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் காலை முதல் மழை பெய்து வந்த நிலையில், இந்தப் போட்டியானது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு வார்ம் அப் போட்டியில் கூட இந்திய அணி விளையாடாமல் நேரடியாக உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது.

World Cup 2023: ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜய் ஜடேஜா நியமனம்!

நாளை 4ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் கேப்டன்ஸ் டே என்று சொல்லப்படும் 10 அணிகளின் கேப்டன்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. இதில் ஒவ்வொரு அணியின் கேப்டனும் பாரம்பரிய முறைப்படி மைதானத்திற்கு அழைத்து வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி சைக்கிள் ரிக்‌ஷாவில் ஒய்யாரமாக அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hangzhou Asian Games 2023, Karan KC: பேட் உடைந்த நிலையிலும் விளையாடிய நேபாள் வீரர் கரண் கேசி!

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios