AG 2023:5000மீ தடகளப் போட்டியில் இந்தியா வீராங்கனை பருல் சௌத்ரிக்கு தங்கம், இந்தியா 14 தங்கத்துடன் 4ஆவது இடம்!
ஆசிய விளையாட்டின் தற்போது நடந்த 5000மீ தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை பருல் சௌத்ரி தங்கம் கைப்பற்றினார்.

சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், தற்போது நடந்த பெண்களுக்கான 5000மீ தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை பருல் சௌத்ரி தங்கம் வென்றுள்ளார். 5000மீ தடகளப் பிரிவில் இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இவர், நேற்று நடந்த 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
World Cup 2023: ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜய் ஜடேஜா நியமனம்!
பெண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை அன்னுராணி 62.92 மீட்டர் தூரம் வரையில் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். பெண்களுக்கான 400மீ தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இவர் நேற்று நடந்த போட்டியில் பிடி உஷாவின் சாதனையை சமன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக இந்திய அணி 14 தங்கம் வென்றுள்ளது.
Hangzhou Asian Games 2023, Karan KC: பேட் உடைந்த நிலையிலும் விளையாடிய நேபாள் வீரர் கரண் கேசி!
இன்று நடந்த மற்றொரு போட்டியில் ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இவர், 16.68 மீ நீளம் தாண்டி வெண்கலம் கைப்பற்றினார். இதே போன்று 800மீ தடகளப் போட்டியில் இந்திய வீரர் முகமது அப்சல் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இதன் மூலமாக இந்தியா இதுவரையில் 14 தங்கம், 24 வெள்ளி மற்றும் 26 வெண்கலப் பதக்கத்துடன் 64 பதக்கங்கள் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 4ஆவது இடத்திலுள்ளது.