World Cup 2023: ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜய் ஜடேஜா நியமனம்!
உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அஜய் ஜடேஜாவை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது.
இந்தியாவில் வரும் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்த கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக 10 அணிகளும் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. கடந்த 29 ஆம் தேதி தொடங்கிய வார்ம் அப் போட்டிகள் இன்று நடக்கும் போட்டிகளுடன் முடிவடைகிறது.
Hangzhou Asian Games 2023, Karan KC: பேட் உடைந்த நிலையிலும் விளையாடிய நேபாள் வீரர் கரண் கேசி!
இன்று நடக்கும் 8ஆவது வார்ம் அப் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை முதலில் பேட்டிங் விளையாடி வருகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அஜய் ஜடேஜாவை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது தங்களது அணியின் வழிகாட்டியாக, ஆலோசகராக நியமனம் செய்துள்ளது.
இது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023க்கான ஆப்கானிஸ்தான் அணியின் வழிகாட்டியாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான அஜய் ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது.
Hangzhou 2023: கேனோ இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியா – 62 பதக்கங்களுடன் 4ஆவது இடம்!
கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அஜய் ஜடேஜா, 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 576 ரன்களும், 196 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5359 ரன்களும் எடுத்துள்ளார். கிரிக்கெட் தவிர, கேல் Khel என்ற படத்திலும், Pal Pal Dil Ke Ssaat என்ற பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Asian Games 2023, India vs Nepal: சுரேஷ் ரெய்னா, சுப்மன் கில் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!