11:55 PM (IST) Jul 12

IND vs ENG 3rd Test ஜடேஜா, கே.எல்.ராகுல் 'மாஸ்' சாதனை! இந்திய அணி 387 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் ஜடேஜா, கே.எல்.ராகுலின் சூப்பர் ஆட்டத்தால் இந்திய அணி 387 ரன்கள் குவித்தது.

Read Full Story
11:38 PM (IST) Jul 12

IND vs ENG 3rd Test பயப்படுறியா குமாரு! இங்கிலாந்து வீரரை ஒன்று சேர்ந்து கலாய்த்த இந்திய வீரர்கள்! என்ன நடந்தது?

கடைசி ஓவரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் சாக் க்ரொலியை சுப்மன் கில் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கலாய்த்தனர்.

Read Full Story
10:49 PM (IST) Jul 12

IND vs ENG 3rd Test இங்கிலாந்து எடுத்த அதே ஸ்கோரில் ஆல் அவுட் ஆன இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 119.2 ஓவர்களில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்தும் தனது முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் இந்தியாவும் அதே ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் (100 ரன்) சதமும், ரிஷப் பண்ட் (74), ஜடேஜா (72) ஆகியோர் அரை சதமும் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

09:38 PM (IST) Jul 12

IND vs ENG 3rd Test கோலி, சச்சின் கூட செய்யாத சாதனையை படைத்த கே.எல்.ராகுல்! லார்ட்ஸில் மிகப்பெரும் கெளரவம்!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2 சதங்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.

Read Full Story
09:04 PM (IST) Jul 12

IND vs ENG 3rd Test ரவீந்திர ஜடேஜா பொறுப்பான அரை சதம்! போராடும் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா பொறுப்பான அரை சதம் அடித்துள்ளார். 89 பந்துகளில் 5 பவுண்டரியுடன் அரை சதத்தை பூர்த்தி செய்துள்ளார். 254/5 என்ற நிலையில் இருந்து இந்திய அணியை 300 ரன்கள் கடக்க வைத்துள்ளனர். இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 335 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா (50), வாஷிங்டன் சுந்தர் (2) களத்தில் உள்ளனர். இந்திய அணி 53 ரன்கள் பின்தங்கியுள்ளது.

08:15 PM (IST) Jul 12

IND vs ENG 3rd Test காயத்துடன் விளையாடி விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்! தோனி சாதனை சமன்!

இந்திய வீரர் ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி விவியன் ரிச்சர்ட்ஸ், தோனி சாதனையை முறியடித்துள்ளார். இது தொடர்பான முழு விவரத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

Read Full Story
07:02 PM (IST) Jul 12

IND vs ENG 3rd Test டியூக்ஸ் பந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையில்லையா? Dukes ball மீது விமர்சனங்கள் எழுவது ஏன்?

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் டியூக்ஸ் பந்துகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த பந்துகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Read Full Story
06:23 PM (IST) Jul 12

IND vs ENG 3rd Test சூப்பர் சதம் விளாசி விக்கெட்டை இழந்த கே.எல்.ராகுல்!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் 10வது டெஸ்ட் சதம் அடித்து அசத்தியுள்ளார். இக்கட்டான நிலையில் இருந்து அணியை மீட்ட அவர் 13 பவுண்டரியுடன் 176 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து அவர் 100 ரன்னில் சோயிப் பஷிர் பந்தில் கேட்ச் ஆனார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 254/5 என்ற நிலையில் உள்ளது. ஜடேஜா, நிதிஷ்குமார் ரெட்டி களத்தில் உள்ளனர்.

05:37 PM (IST) Jul 12

IND vs ENG 3rd Test தேவையில்லாமல் ரன் அவுட் ஆன ரிஷப் பண்ட்! உணவு இடைவேளை வரை இந்தியா ஆதிக்கம்!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளில் உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. நன்றாக விளையாடி அரை சதம் (74 ரன்) அடித்த ரிஷப் பண்ட் கே.எல்.ராகுல் சதம் அடிப்பதற்காக தேவையில்லாமல் ஒரு ரன்னுக்காக வேகமாக ஓடி பென் ஸ்டோக்ஸின் சூப்பர் த்ரோவில் ரன் அவுட்டானார். கே.எல்.ராகுல் 98 ரன்னில் களத்தில் உள்ளார். இந்திய அணி 139 ரன்கள் பின்தங்கியுள்ளது.

05:28 PM (IST) Jul 12

IND vs ENG 3rd Test Jasprit Bumrah - வரலாற்று சாதனை படைத்தும் கொண்டாடாத பும்ரா! ஏன் தெரியுமா?

லார்ட்ஸில் 5 விக்கெட் எடுத்தும் கொண்டாடாதற்கு ஜம்பிரித் பும்ரா விளக்கம் அளித்துள்ளார். இந்த போட்டியில் பல்வேறு சாதனைகளை பும்ரா படைத்திருந்தார்.

Read Full Story
04:59 PM (IST) Jul 12

IND vs ENG 3rd Test ரிஷப் பண்ட் அரை சதம்! வலுவான நிலையை நோக்கி இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அரை சதம் அடித்து அசத்தியுளார். 7 பவுண்டரி 1 சிக்சருடன் 86 பந்தில் அவர் அரைசதம் விளாசியுள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 215/3 என்ற நிலையில் உள்ளது. ரிஷப் பண்ட் (55), கே.எல்.ராகுல் (84) களத்தில் உள்ளனர். இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்துள்ளனர். இந்திய அணி இன்னும் 180 ரன்கள் பின்தங்கியுள்ளது.

03:13 PM (IST) Jul 12

IND vs ENG 3rd Test இந்தியா vs இங்கிலாந்து 3ம் நாள் ஆட்டம்!

இந்தியா vs இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்குகிறது. நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்த கே.எல்.ராகுல் அரை சதம் (53 ரன்) அடித்து களத்தில் உள்ளார். ரிஷப் பண்ட்டும் (19 ரன்) களத்தில் இருக்கிறார். இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.