Jasprit Bumrah: வரலாற்று சாதனை படைத்தும் கொண்டாடாத பும்ரா! ஏன் தெரியுமா?
லார்ட்ஸில் 5 விக்கெட் எடுத்தும் கொண்டாடாதற்கு ஜம்பிரித் பும்ரா விளக்கம் அளித்துள்ளார். இந்த போட்டியில் பல்வேறு சாதனைகளை பும்ரா படைத்திருந்தார்.

Jasprit Bumrah Doesn't Celebrate Despite Taking 5 Wickets At Lord's
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 112 ஓவர்களில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா 27 ஓவர்களில் 74 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
வழக்கமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட் எடுத்தவுடன் பவுலர்கள் பந்துடன் கையை தூக்கி உயர்த்தி கொண்டாடுவார்கள். ஆனால் பும்ரா ஏதும் கொண்டாடாமல் அமைதியாக இருந்தார்
பும்ரா சாதனை மேல் சாதனை
பும்ரா சாதனை மேல் சாதனைஅதுவும் பாரம்பரியமிக்க லார்ட்ஸில் ஒரு பவுலர் 5 விக்கெட் எடுத்தால் அவரது பெயர் அங்கு பொறிக்கப்படும். இப்படிபட்ட சாதனையை படைத்தும் பும்ரா அதை கொண்டாததது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் வெளிநாடுகளில் அதிக 5 விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையையும் பும்ரா படைத்தார்.
அத்துடன் இங்கிலாந்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் இந்திய ஜாம்பவான் கபில் தேவ்வை பும்ரா முந்தினார்.முதல் நாளில் ஹாரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி 1983 உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில்தேவ்வின் சாதனையை அவர் சமன் செய்தார். மேலும் ஸ்டோக்ஸை அவுட் செய்து கபில்தேவ் சாதனையை முறியடித்தார்.
பும்ரா விளக்கம்
இப்படி சாதனை மேல் சாதனை படைத்த பும்ராவிடம் நேற்றைய 2ம் நாள் ஆட்டத்துக்கு பிறகு ஏன் சாதனையை கொண்டாடவில்லை? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ''உண்மை என்னவென்றால், நான் சோர்வாக இருந்தேன். நான் மைதானத்தில் நீண்ட நேரம் பந்து வீசினேன். சில சமயங்களில் நான் சோர்வடைந்தேன்'' என்றார்.
பும்ராவை பாராட்டும் ரசிகர்கள்
மேலும் பேசிய பும்ரா, ''நான் இப்போது 21-22 வயதில் இல்லை துள்ளிக் குதித்து கொண்டாடுவதற்கு. நான் வழக்கமாக அப்படி பெரிய அளவில் கொண்டாடுவது இல்லை. அணிக்கு நான் பங்களித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அதைத் தவிர, நான் என் குறிக்கோளுக்கு திரும்பி அடுத்த பந்தை வீச விரும்பினேன்'' தெரிவித்துள்ளார். சில பவுலர்கள் ஒரு விக்கெட் எடுத்தாலே துள்ளிக் குதித்து கொண்டாடுவார்கள். ஆனால் பும்ராவின் அமைதியை அனைவரும் பாராட்டி வருகிறனர்.
மறக்க முடியாத டெஸ்ட் இதுதான்
மேலும் லார்ட்ஸில் 5 விக்கெட் எடுத்தது குறித்து பேசி பும்ரா, ''வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் 5 விக்கெட் எடுத்து எனது பெயர் பொறிக்கப்பட்டது குறித்து வருங்காலத்தில் எனது மகனிடம் நான் கூறுவேன்'' என்றார். தொடர்ந்து, ''எனக்கு மிகவும் மறக்கமுடியாத டெஸ்ட் போட்டி கடந்த முறை இங்கிலாந்தில் நடந்தது. ஷமியும், நானும் பேட்டிங்கில் இந்திய அணியை மீட்டெடுத்த அந்த நினைவுகளை நான் நிச்சயமாக நினைவில் வைத்திருப்பேன்.
தொடர்ந்து பேசிய பும்ரா, ''நான் இந்தியாவுக்காக விளையாடும்போது, என்னால் முடிந்த அளவு பங்களிக்க விரும்புகிறேன், நீங்கள் அதைச் செய்யும்போது, அணியை ஒரு நல்ல நிலையில் வைத்திருக்கிறீர்கள் என்று நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள். எனவே எனது சிந்தனை செயல்முறை அப்படியே இருக்கும்'' என்று தெரிவித்தார்.