India vs South Africa: விராட் கோலியின் சதம், இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய திருமண ஜோடி!

உத்தரப்பிரதேசத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகள் உள்பட அனைவரும் விராட் கோலியின் பிறந்தநாள், 49ஆவது சதம் மற்றும் இந்திய அணியின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

In Uttar Pradesh Bride and Groom celebrated Virat Kohli's century and the victory of the Indian team rsk

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 37ஆவது லீக் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்து அணிக்கு நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். அவர், 40 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 23 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.

49லிருந்து 50 வர 365 நாட்கள் ஆனது –50 ஆவது சதம் அடிப்பீர்கள் என்று நம்புகிறேன் – கோலிக்கு, சச்சின் வாழ்த்து!

அடுத்து வந்த கேஎல் ராகுல் 8, சூர்யகுமார் யாதவ் 22 ரன்களில் வெளியேறினர். கடைசியாக வந்த ரவீந்திர ஜடேஜா, விராட் கோலியுடன் இணைந்து கடைசி வரை விளையாடினர். இதில், விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 49ஆவது சதத்தை நிறைவு செய்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்தார்.

IND vs SA: கோலிக்குப் பதிலாக ஜடேஜாவிற்கு ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் - நடிகை கஸ்தூரி விமர்சனம்!

இறுதியாக விராட் கோலி 101 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 29 ரன்களும் எடுக்க இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிகக அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முதல் பின்வரிசை வீரர்கள் வரையில் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில், அதிகபட்சமாக மார்கோ யான்சென் 14 ரன்கள் சேர்த்தார்.

India vs South Africa: 16 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவை 83 ரன்களுக்கு சுருட்டி இந்தியா சாதனை!

குயீண்டன் டி கான் 3, ஐடன் மார்க்ரம் 9, ஹென்ரிச் கிளாசென் 1, ரஸ்ஸி வான் டெர் டூசென் 13 கேச மகாராஜ் 7 என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். இறுதியாக 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென் ஆப்பிரிக்கா 83 ரன்கள் மட்டுமே எடுத்து 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் இந்த பிரமாண்ட வெற்றியை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகள் உள்பட அனைவரும் விராட் கோலியின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு அவரது சதம் மற்றும் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதில், இன்று எனது திருமணம், இன்று இந்தியாவும் வெற்றி பெற்று சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்திருப்பதால் இது எனக்கு ‘டபுள் தமாக்கா என்று மணமகன் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

India vs South Africa: 2023ல் முதல் முறையாக ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios