Asianet News TamilAsianet News Tamil

49லிருந்து 50 வர 365 நாட்கள் ஆனது –50 ஆவது சதம் அடிப்பீர்கள் என்று நம்புகிறேன் – கோலிக்கு, சச்சின் வாழ்த்து!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 49ஆவது சதம் அடித்த விரா கோலிக்கு 50ஆவது சதம் அடித்து தனது சாதனையை முறியடிக்க சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sachin Tendulkar congratulates Virat Kohli on his 50th century rsk
Author
First Published Nov 6, 2023, 9:15 AM IST

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான 37ஆவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில், 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பிறகு மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 23 ரன்களில் கேசவ் மகாராஜ் பந்தில் கிளீன் போல்டானார்.

IND vs SA: கோலிக்குப் பதிலாக ஜடேஜாவிற்கு ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் - நடிகை கஸ்தூரி விமர்சனம்!

இதையடுத்து விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி அரைசதம் அடித்து அதனை சதத்திற்கு கொண்டு சென்றார். 3 போட்டிகளுக்கு பிறகு 4ஆவது போட்டியில் 49ஆவது சதம் அடித்துள்ளார். இதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 48ஆவது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி அதன் பிறகு 95, 0 மற்றும் 88 ரன்களில் அடுத்தடுத்த ஆட்டமிழந்து 5 மற்றும் 12 ரன்களில் 49ஆவது சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

India vs South Africa: 16 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவை 83 ரன்களுக்கு சுருட்டி இந்தியா சாதனை!

இந்த நிலையில் தான் தனது 35ஆவது பிறந்தநாளான நேற்று ஒரு நாள் போட்டிகளில் 49ஆவது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி 119 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து இந்த சாதனையை சமன் செய்துள்ளார். அதுவும் 277 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சச்சின் 452 இன்னிங்ஸ்களில் 49 சதங்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா 31 சதங்களும், ரிக்கி பாண்டிங் 30 சதங்களும் அடித்துள்ளனர்.

India vs South Africa: 2023ல் முதல் முறையாக ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா!

இந்த நிலையில், தான் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சிறப்பாக விளையாடுனீர்கள் விராட். 49 லிருந்து 50 ஆக எனக்கு 365 நாட்கள் ஆனது. அடுத்த சில நாட்களில் 50ஆவது சதம் அடித்து எனது சாதனையை முறியடிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஜடேஜா சுழலுக்கு தெ.ஆ., 83 ரன்களுக்கு காலி – விராட் கோலிக்கு வெற்றியை பிறந்தநாள் பரிசாக கொடுத்த டீம் இந்தியா!

 

மேலும், பிறந்தநாளில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் 131 ரன்கள் நாட் அவுட் மற்றும் மிட்செல் மார்ஷ் இந்த உலகக் கோப்பையில் தனது பிறந்தநாளில் 121 ரன்கள் எடுத்துள்ளார். இறுதியாக விராட் கோலி தனது 35ஆவது பிறந்தநாளில் சதம் விளாசியுள்ளார்.

பிறந்தநாளில் சதம் அடித்தவர்கள்:

வினோத் காம்ப்ளி 100* vs இங்கிலாந்து ஜெய்பூர் 1993 (21ஆவது பிறந்தநாள்)

சச்சின் டெண்டுல்கர் 134 vs ஆஸ்திரேலியா, ஷார்ஜா 1998 (25ஆவது பிறந்தநாள்)

சனத் ஜெயசூர்யா 130 vs இந்தியா, கராச்சி 2008 (39 ஆவது பிறந்தநாள் )

ராஸ் டெய்லர் 131* vs பாகிஸ்தான், பல்லேகலே Pallekele 2011 (27 ஆவது பிறந்தநாள்)

டாம் லாதம் 140* vs நெதர்லாந்து, ஹாமில்டன் Hamilton 2022 (30 ஆவது பிறந்தநாள்)

மிட்செல் மார்ஷ் 121 vs பாகிஸ்தான், பெங்களூரு Bengaluru 2023 (32 ஆவது பிறந்தநாள்)

விராட் கோலி 101* vs தென் ஆப்பிரிக்கா கொல்கத்தா 2023 (35 ஆவது பிறந்தநாள்)

இதில், ராஸ் டெய்லர், மிட்செல் மார்ஷ் மற்றும் விராட் கோலி ஆகியோர் உலகக் கோப்பையில் பிறந்தநாளன்று சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் விராட் கோலி முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் சதம் விளாசினார். தற்போது அதே மைதானத்தில் தனது 49ஆவது சதத்தை நிறைவு செய்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios