இது மட்டும் நடந்தால் ஆர்சிபியின் வெற்றி 100 சதவிகிதம் உறுதி; நடக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 6ஆவது போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற வேண்டுமானால், விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும்.

if RCB team wants to win the 6th match of the IPL then Virat Kohli, Faf du Plessis and Glenn Maxwell will have to play aggressively against Punjab Kings rsk

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியைத் தொடர்ந்து ஆர்சிபி தனது 2ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற வேண்டுமானால், இது மட்டும் நடக்க வேண்டும். அது என்ன என்று பார்க்கலாம்.

பாப் டூப்ளெசிஸ் – விராட் கோலி காம்போ:

இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி முதல் 6 ஓவர்களில் 70+ ரன்கள் குவிக்க வேண்டும்.

விராட் கோலி – கிளென் மேக்ஸ்வெல் காம்போ:

பாப் டூப்ளெசிஸ் ஆட்டமிழந்தால், விராட் கோலி மற்றும் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும். இந்த ஜோடி அடுத்த 6 ஓவருக்கு 70 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும். இதன் மூலமாக ஆர்சிபி முதல் 14 ஓவர்களில் 140 ரன்களுக்கு மேல் எடுக்கும். சென்னைக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட்டில் ஆட்டமிழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரூன் க்ரீன், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக்:

கடைசி 6 ஓவர்களில் இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தால் ஆர்சிபி கண்டிப்பாக 200 ரன்களுக்கு மேல் குவிக்கும். இதன் மூலமாக ஆர்சிபியின் வெற்றி வாய்ப்பு 100 சதவிகிதம் உறுதியாகும். இதுவே முதலில் ஆர்சிபி பீல்டிங் செய்தால், பவுலிங்கில் பட்டய கிளப்ப வேண்டும். பீல்டிங்கில் தவறு செய்யவே கூடாது.

ஆர்சிபி பவுலிங்கில் என்ன செய்ய வேண்டும்?

கேமரூன் க்ரீன் முதல் ஓவர்:

கடந்த போட்டியில் 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட் எடுத்த க்ரீன் முதல் ஓவர் வீச வேண்டும். அவரைத் தொடர்ந்து யாஷ் தயாள் 2 ஆவது ஓவர் வீச வேண்டும். முகமது சிராஜ் மற்றும் அல்ஜாரி ஜோசப் அடுத்தடுத்து ஓவர்கள் வீச வேண்டும்.

ஸ்பின்:

மேக்ஸ்வெல்லிற்கு முதலில் ஓவர் தர வேண்டும். அதன் பிறகு மாயங்க் டாகருக்கு ஓவர் கொடுக்கலாம்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் பேட்டிங் ஆர்டரில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண், ஜித்தேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் மட்டுமே இருக்கின்றனர். அவர்களது விக்கெட்டை கைப்பற்றினாலே ஆர்சிபியின் வெற்றி பாதி உறுதியாகிவிடும். அதன் பிறகு வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், பவுலர்களை எடுத்துவிட்டால் ஆர்சிபியின் வெற்றி 100 சதவிகிதம் உறுதியாகிவிடும்.

 

நேருக்கு நேர்:

இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் 31 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணியானது 17 போட்டியிலும், ஆர்சிபி 14 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மொகாலியில் நடந்த போட்டியில் ஆர்சிபி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

பெங்களூரு சின்னச்சுவாமி மைதானம்:

பெங்களூருவின் கோட்டை என்று சொல்லப்படும் சின்னச்சுவாமி மைதானத்தில் இரு அணிகளும் 11 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஆர்சிபி 6 போட்டியிலும், பஞ்சாப் கிங்ஸ் 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆர்சிபி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒட்டுமொத்தமாக பெங்களூரு மைதானத்தில் ஆர்சிபி:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் இதுவரையில் 84 போட்டிகள் நடந்துள்ளன. இதில், 39 போட்டிகளில் ஆர்சிபி வெற்றியும், 40 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 4 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.

இரு அணிகளுக்கு இடையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

கிறிஸ் கெயில் (ஆர்சிபி, பிபிகேஸ்) – 17 போட்டிகள் – 873 ரன்கள் – அதிகம் 117

விராட் கோலி (ஆர்சிபி) – 30 போட்டிகள் – 861 ரன்கள் – அதிகம் 113 ரன்கள்

ஏபி டிவிலியர்ஸ் (ஆர்சிபி) – 21 போட்டிகள் -718 ரன்கள் – 89*

இரு அணிகளுக்கு இடையில் அதிக விக்கெட் எடுத்தவர்கள்:

யுஸ்வேந்திர சகால் – 16 இன்னிங்ஸ் – 25 விக்கெட்டுகள் – பெஸ்ட் 4/25

சந்தீப் சிங் (பிபிகேஸ்) – 10 இன்னிங்ஸ் – 16 விக்கெட்டுகள் – பெஸ்ட் 3/15

பியூஷ் சாவ்லா (பிபிகேஸ்) – 12 இன்னிங்ஸ் – 15 விக்கெட்டுகள் – 4/17

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios