Asia Cup 2023, India vs Pakistan: தொடர்ந்து மழை பெய்தால், 20 ஓவர் போட்டிக்கு வாய்ப்பு!

இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆடுவதற்கு முன்னதாக மழை பெய்து வரும் நிலையில், போட்டி 20 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

If it continues to rain, there is a chance for a 20 over match between India vs Pakistan in Asia Cup 2023 rsk

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 11, விராட் கோலி 4, ஷ்ரேயாஸ் ஐயர் 14, சுப்மன் கில் 10 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

IND vs PAK: மீண்டும் கொட்டி தீர்க்கும் மழை; பாகிஸ்தான் பேட்டிங் ஆடுவதில் சிக்கல்; ஓவர்கள் குறைக்கப்படுமா?

அடுத்து வந்த இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் இஷான் கிஷான் 82 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியாவும் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 14, ஜஸ்ப்ரித் பும்ரா 16 ரன்கள் எடுக்க, இந்தியா 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IND vs PAK:இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா நிதான ஆட்டம்; கடைசில கை கொடுத்த பும்ரா; இந்தியா 266 ரன்கள் குவிப்பு!

இதையடுத்து 267 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பாகிஸ்தான் அணி விளையாட இருந்தது. ஆனால், அதற்குள்ளாக மழை பெய்த நிலையில், போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில், ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதன்படி எத்தனை ஓவர்கள் குறைக்கப்பட்டால் எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறித்து பார்த்தால்,

Asia Cup 2023, IND vs PAK: 5ஆவதாக வந்து அணியை சரிவிலிருந்து மீட்ட இஷான் கிஷான்; தொடர்ந்து 4ஆவது அரைசதம்!

போட்டியானது 20 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டால், 155 ரன்களும், 30 ஓவர்களாக குறைக்கப்பட்டால் 203 ரன்களும், 40 ஓவர்களாக குறைக்கப்பட்டால் 239 ரன்களும் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்படும். போட்டி 20 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட கடைசி நேரம் இரவு 10.27 மணி ஆகும். ஒருவேளை மழையால் போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

KL Rahul: காட்டி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மனைவியுடன் கேஎல் ராகுல் சாமி தரிசனம்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios