Asianet News TamilAsianet News Tamil

India vs Australia: இந்தியாவிற்கு நல்ல வாய்ப்பு: ஆஸ்திரேலியாவை தோற்கடிக்குமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ஐசிசி ஒரு நாள் அணிகளின் ரேங்கிங் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடிக்கும்.

If India Beat Australia in First ODI then, it will become number one in ICC Mens ODI Team Rankings
Author
First Published Sep 19, 2023, 10:58 AM IST

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாள், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றன. முதலில் நடந்த லீக் போட்டியில் நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறின.

ஆஸி, சீரிஸ் தேவையில்லாத ஒன்று, இந்திய வீரர்கள் காயம் அடைய வாய்ப்பு உண்டு – வாசீம் அக்ரம் எச்சரிக்கை!

இதையடுத்து இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 8 ஆவது முறையாக சாம்பியனானது.

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததன் மூலமாக நம்பர் 1 இடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில், தற்போது புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் நம்பர் 1 இடத்திலும், இந்தியா நம்பர் 2 இடத்திலும், ஆஸ்திரேலியா 3ஆவது இடத்திலும் உள்ளன.

ஆஸி.யுடன் ஒருநாள் தொடர்: இந்திய அணியில் மீண்டும் அஸ்வின்! ரோஹித், கோலிக்கு இடம் இல்லை!

ஆனால், இந்தியா நம்பர் 1 இடம் பிடிப்பதற்கு வரும் 22 ஆம் தேதி நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், ஐசிசி ஆண்கள் ஒரு நாள் அணிகளின் ரேங்கிங் பட்டியலில் இந்தியா நம்பர் 1 இடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் 22 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் நடக்கிறது. அதன் பிறகு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்கிறது. இதையடுத்து நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ரோகித், கோலி, ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு: கேப்டனான கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், அஸ்வினுக்கு வாய்ப்பு!

செப்டம்பர் 22 – இந்தியா – ஆஸ்திரேலியா – முதல் ஒரு நாள் போட்டி – மொஹாலி – பிற்பகல் 1.30 மணிக்கு

செப்டம்பர் 24 – இந்தியா – ஆஸ்திரேலியா – 2ஆவது ஒரு நாள் போட்டி – இந்தூர் – பிற்பகல் 1.30 மணிக்கு

செப்டம்பர் 27 - இந்தியா – ஆஸ்திரேலியா – 3ஆவது ஒரு நாள் போட்டி – ராஜ்கோட் – பிற்பகல் 1.30 மணிக்கு

Follow Us:
Download App:
  • android
  • ios