சேலம் ஸ்பார்டனஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் 2024 தொடரின் 20ஆவது போட்டியில் டாஸ் ஜெயிச்சு முதலில் பேட்டிங் செய்த ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்துள்ளது.

திருநெல்வேலியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் 2024 தொடரின் 20ஆவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது. அமித் சாத்விக் மற்று துஷார் ரஹேஜா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர்.

Hardik Pandya Launch New Brand:பிதிய பயணத்தை தொடங்கிய ஹர்திக் பாண்டியா – தனது பெயரிலேயே ஆடை பிராண்ட் அறிமுகம்!

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 110 ரன்கள் குவித்தது. இதில் சாத்விக் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாலசந்தர் அனிருத் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சாய் கிஷோர் 12 ரன்களில் நடையை கட்டினார். துஷார் ரஹேஜா 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் சேலம் அணியில் குரு சாய் மற்றும் பொய்யாமொழி இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து 193 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சேலம் ஸ்பார்டன்ஸ் அணி விளையாடி வருகிறது. தற்போது வரையில் 14 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்திருக்கிறது.

4 ரன்னில் சதத்தை தவறவிட்ட பாபா இந்திரஜித் – லைகா கோவை அணிக்கு முதல் ஆப்பு வச்ச திண்டுக்கல் டிராகன்ஸ்!