ஆஸ்திரேலியாவிடம் 3வது டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்து தொடரை இழந்த பாகிஸ்தான் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திலிருந்து 4ம் இடத்திற்கு பின் தங்கியது.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளும் டிராவான நிலையில், 3வது டெஸ்ட்டில் 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 1-0 என தொடரை வென்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திலேயே நீடிக்கிறது. ஆனால் வெற்றி விகிதம் 71.42 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியின் வெற்றி விகிதம் 61.11 சதவிகிதத்திலிருந்து 52.38 சதவிகிதமாக குறைந்ததையடுத்து, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திலிருந்து 4ம் இடத்திற்கு பின் தங்கியது. பாகிஸ்தான் அணி 4ம் இடத்திற்கு பின் தங்கியதால், இந்திய அணி 4ம் இடத்திலிருந்து 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி 60 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.
