இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் ஆடியது. ஜோ ரூட்டின் மிகச்சிறப்பான பேட்டிங்கால் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.

இந்த வெற்றிக்கு பின், 68.7% என்ற வெற்றி விகிதத்தை பெற்றுள்ள இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளது. வெற்றி சதவிகிதத்தின் அடிப்படையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகிறது. 

அந்தவகையில் 71.7 வெற்றி சதவிகிதத்துடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 70 சதவிகிதத்துடன் நியூசிலாந்து 2ம் இடத்திலும், 69.2% உடன் ஆஸ்திரேலியா 3ம் இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து அணி 4ம் இடத்தில் உள்ளது.