World Cup 2023: ஏப்ரல் 4ல் ஊன்றுகோல் உதவியுடன் வந்த கேன் வில்லியம்சன்; இன்று உலகக் கோப்பை கேப்டன்!
உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து என்று 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த தொடரில் மொத்தமாக 45 லீக் போட்டிகள் நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Sanju Samson: துபாய் சென்று கோல்ஃப் விளையாடிய சஞ்சு சாம்சன்; வைரலாகும் வீடியோ!
அதுவும் வித்தியாசமான முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை கொண்டு நியூசிலாந்து அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கிரிக்கெட் வீரர்களின் மனைவி, குழந்தைகள், தாய் உள்ளிட்டோர் தங்கள் வீரரின் பெயரை சொல்லும் விதமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்ற கேன் வில்லியம்சன் முதல் போட்டியிலேயே காயம் அடைந்து வெளியேறினார். நடக்க கூட முடியாமல் ஊன்றுகோல் உதவியுடன் நியூசிலாந்திற்கு திரும்ப சென்றார். இந்த நிலையில், இன்று உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் டாம் லேதம் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நியூசிலாந்து அணியுடனான ஒப்பந்தமே தேவையில்லை என்று வெளியேறிய டிரெண்ட் போல்ட் அணிக்கு திரும்பினார். டெவான் கான்வே, ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, மேட் ஹென்றி, கிளென் பிலிப்ஸ், டிம் சவுதி, மார்க் சேப்மேன், வில் யங், லாக்கி ஃபெர்குசன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
Jasprit Bumrah: தந்தையான பும்ராவை பாராட்டி பரிசு பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி; வைரலாகும் வீடியோ!
நியூசிலாந்து உலகக் கோப்பை அணி:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரெண்ட் போல்ட், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), டிம் சவுதி, மார்க் சேப்மேன், லாக்கி ஃபெகுசன், மேட் ஹென்றி, டாம் லேதம் (துணை கேப்டன்), மிட்செல் சாண்ட்னர், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி, டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, வில் யங்