PAK vs BAN: சாம்பியன்ஸ் டிராபியில் இன்று ராவல்பிண்டியில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவிருந்தது, ஆனால் இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளும் தொடரில் ஒரு வெற்றிகூட இல்லாமல் வெளியேறுகின்றன.

சாம்பியன்ஸ் டிராபியில் இன்று ராவல்பிண்டியில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவிருந்தது, ஆனால் இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. இத்துடன் தொடரில் இரு அணிகளின் பயணமும் ஒரு வெற்றிகூட இல்லாமல் முடிவுக்கு வந்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் ஒன்பதாவது போட்டி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே ராவல்பிண்டியில் நடைபெறவிருந்தது. ஆனால் மழை காரணமாக அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்துடன், இந்தத் தொடரில் இருந்து இரு அணிகளும் வெளியேறுகின்றன. இரு அணிகளும் தங்கள் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இருந்தன.

இரு அணிகளும் முதல் இரண்டு குரூப் போட்டிகளில் விளையாடி தோல்வியடைந்தன. இப்போது மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பே மழை அதிகமாகப் பெய்ததால், டாஸ்கூட போட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

'இந்தியா ஒரே பிட்ச்சில் விளையாடுகிறது'; தோல்விக்கு சாக்குப்போக்கு கண்டுபிடித்த பாகிஸ்தான்!

Scroll to load tweet…

1996 க்குப் பிறகு முதல் முறையாக ஐ.சி.சி போட்டியை நடத்திய பாகிஸ்தான் அணியின் ஆட்டம் மிகவும் சுமாராக இருந்தது. தொடக்க ஆட்டத்தில் அந்த அணி நியூசிலாந்திடம் மோசமாகத் தோற்றது. அதன் பிறகு துபாயில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் படுதோல்வி அடைந்தது. அணியில் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று நம்பப்பட்டது. அதற்கு மாறாக மிக மோசமாக விளையாடி தொடரில் இருந்தே வெளியேறுகிறது. பவுலிங், பேட்டிங், பீல்டிங் அனைத்திலும் சொதப்பியது அந்த அணியின் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துவிட்டது.

பாகிஸ்தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அணித் தேர்வு சரியாக செய்யப்படவில்லை. வேகப்பந்து வீச்சையே நம்பியிருந்தது. ஆனால், இரண்டு போட்டிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் ஆட்டத்தின் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தினர். பேட்டிங்கிலும் மிகவும் மந்தமாகவே செயல்பட்டனர். குறிப்பாக மிக மெதுவான வேகத்தில் ரன்கள் சேர்த்ததால், எதிரணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க முடியாமல் போனது. குறிப்பாக, 50 ஓவர்களில் கிட்டத்தட்ட பாதி பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் இருந்தது கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக, நல்ல ஃபார்ம்மில் இருந்த பேட்ஸ்மேன் சாம் அயூப் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. அவருக்குப் பதிலாக ஃபகர் ஜமான் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். ஆனால், அவரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின்போது காயமடைந்து தொடரிலிருந்தே வெளியேறினார். இதனால் அணியின் செயல்பாட்டில் வெற்றியை நோக்கிப் போராடும் முனைப்பு இல்லாதது போல் தோன்றியது.

போட்டியின் போது மைதானத்தில் ஓர் அணியாக செயல்படுவதைக் காணப்படவில்லை. நெருக்கடியான சூழ்நிலையில் எந்த வீரரும் பொறுப்புடன் விளையாடவில்லை. ஆட்டத்தின் போக்கை உணராமல் தவறான ஷாட்களை விளையாடி விக்கெட்டை தாரை வார்த்தனர். அதே நேரத்தில், கேப்டன் முகமது ரிஸ்வான் போன்ற அனுபவ வீரர்கள் அணியைச் சரியாகக் கையாளத் தவறிவிட்டனர். பேட்டிங், பவுலிங், பீல்டிங் அனைத்திலும் அவரது முடிவுகள் துல்லியமானவையாக இல்லை.

ஹோட்டலில் தனி அறை! மற்ற மதத்தினருக்கு தடை! முகமது ரிஸ்வான் செயல்கள் குறித்து பேசிய சக வீரர்!